நடிகர் மீது பொய்யான பாலியல் புகார்..!நாட்டாமை டீச்சருக்கு தடை..!பின்னணி என்ன..!

0
288

கடந்த சில மாதங்களாக #metoo மொவேமென்ட் என்ற ஹேஸ் டேக் மூலம் நடிகை சின்மயி, வைரமுத்து மீது முன்வைத்துள்ள பாலியல் தொல்லை தான் தமிழ் சினிமாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்த ராணி பிரபல நடிகர் ஷண்முக ராஜன் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். 


நடிகை ராணி தமிழில் “சிவாஜி, அந்நியன் ,விருமாண்டி” போன்ற படங்களில் வில்லனாக நடித்த சண்முகராஜன் தன்னிடம் அங்கும் இங்கும் தொட்டு தவறாக நடந்து கொண்டார் என்றும், அதை தட்டிக்கேட்ட என் கணவரை அவர் தாக்கினார் சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதயடுத்து ராணிக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை என்றும் தன்மீது பொய்புகார் சொன்ன அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சண்முகராஜன் நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் சண்முகராஜனுக்கு நடிகர் சங்கம் தற்போது அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது.

நீங்கள் அளித்த கடிதத்துக்கு விளக்கம் அளிக்கும்படி ராணிக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு இதுவரை அவர் விளக்கம் அளிக்கவில்லை. நடிகர் சங்க செயற்குழு நேரில் ஆஜராகியும் நீங்கள் விளக்கம் அளித்தீர்கள். உங்கள் மீது பாலியல் புகார் காழ்ப்புணர்ச்சியால் கொடுக்கப்பட்டது என்பதை தாங்கள் அளித்த விளக்கம் மூலம் தெரிந்து கொண்டோம். 

இனிவரும் காலத்தில் நடிகை ராணி திரைப்படங்களிலோ, அல்லது தொலைக்காட்சி தொடரிலோ நடிக்க வரும்போது தங்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டால் மட்டுமே அவர் தொடர்ந்து திரைப்பட துறையில் நடிக்க அனுமதி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.