சென்னை வந்தடைந்தார் அமித் ஷா – 24 பிரபலங்களில் ஒருவராக கூட்டத்தில் கலந்துகொண்ட ஏ ஆர் ரஹ்மான் குடும்பத்தின் முக்கிய நபர்.

0
1603
AmithShah
- Advertisement -

இசை அமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷை அமைச்சர் அமித்ஷா சந்தித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த நாடாளுமன்ற தேர்தல் கூடிய விரைவில் நடைபெற இருக்கிறது. இதனால் பாஜக கட்சி தீவிரமாக தயாராகி வருகிறது. தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜக கட்சி தீவிர பணிகளில் ஈடுபட்டு இருக்கிறது. அந்த வகையில் வேலூரில் நடக்கும் ஒன்பதாண்டு பாஜக ஆட்சி சாதனை பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

இதற்காக இவர் நேற்று தமிழ்நாடு வந்திருக்கிறார். இவரை பாஜக கட்சி தொண்டர்கள் சென்னை விமான நிலையத்தில் பிரம்மாண்டமாக வரவேற்று இருந்தார்கள். அதன் பின் அமைச்சர் அமித்ஷா சென்னையில் உள்ள கிண்டி ஐடிசி ஓட்டலில் தங்கி இருந்தார். இதனை அடுத்து பாஜக தலைவர் அண்ணாமலையுடன் அவர் தனியாக ஆலோசனை நடத்தினார். அதன் பின் மத்திய அமைச்சர் எல் முருகன், பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் உடனும் அமித்ஷா ஆலோசனையை நடத்தி இருக்கிறார்.

- Advertisement -

அமைச்சர் அமித்ஷா ஆலோசனை:

மேலும், இந்த ஆலோசனையில் பாஜக கட்சி நிர்வாகம், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைப்பது, தொகுதிகள் தேர்வு செய்வது, திமுகவுக்கு எதிராக வியூகம் வகுப்பது போன்ற பல விஷயங்கள் குறித்து அமித்ஷா பாஜக கட்சியிடம் ஆலோசனை நடத்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இவர்களுடைய ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது.

பிரபலன்களிடம் ஆலோசனை செய்த அமைச்சர் அமித்ஷா:

இந்த நிலையில் அமைச்சர் அமித்ஷா அவர்கள் அரசியலில் இல்லாத பிரபலங்களுடன் திடீரென ஆலோசனை நடத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, அமைச்சர் அமித்ஷா அவர்கள் சுமார் 2 மணி நேரம் அரசியலில் இல்லாத பிரபலங்களுடன் ஆலோசனை நடத்திருக்கிறார். அதில், வின் தொலைக்காட்சி தேவநாதன், விளையாட்டுத் துறையை சேர்ந்த லட்சுமணன், சிவக்குமார் கிருஷ்ணன், இயக்குனர் ஏ ஆர் ராஜசேகரன், இந்தியா சிமெண்ட்ஸ், செட்டிநாடு சிமெண்ட், தாஜ், தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், நல்லி குப்புசாமி, பாஸ்கரன், அனிதா பால் துறை, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், இயக்குனர் சங்க தலைவர் ஆர் கே செல்வமணி போன்ற பல பேர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

அமைச்சர் அமித்ஷா-ஜிவி பிரகாஷ் சந்திப்பு:

அதுமட்டுமில்லாமல் கல்வி, மருத்துவம், சினிமா, இசை, மதம், தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர் போன்ற பல துறைகளை சேர்ந்த பிரபலங்களை அமித்ஷா சந்தித்திருந்தார்கள். மொத்தம் 24 பேர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு 2 மணி நேரத்திற்கு மேல் கலந்துரையாடி இருக்கிறார்கள். மேலும், இந்த சந்திப்பில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கலந்து கொண்டிருப்பது பலருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வைரலாகும் ஜிவி பிரகாஷ் சந்திப்பு:

அது மட்டும் இல்லாமல் ஜிவி பிரகாஷ் அவர்கள் சினிமா நடிகர், இசையமைப்பாளர் என்பதை தாண்டி இவர் சமூக ரீதியான பல விஷயங்களில் தன்னுடைய முற்போக்கான கருத்துக்களையும் தந்திருக்கிறார். இதனால் இவரை சந்தித்து அமித்ஷா ஆலோசனை நடத்திருப்பதும் கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் ஜிவி பிரகாஷ் பாஜக கட்சியில் இணைகிறாரா? என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே மோடியின் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட விழாவில் ஜி வி பிரகாஷ் கலந்துகொண்டு இருந்தார் என்பதும்குறிப்பிடத்தக்கது. .

Advertisement