5 அல்ல இம்முறை 6 பைனலிஸ்ட் – பரபரப்பான கட்டத்தை நோக்கி சரிகமப சீசன் 3 நிகழ்ச்சி. யார் அந்த கடைசி 2 பைனலிஸ்ட்.

0
1988
- Advertisement -

சரிகமப நிகழ்ச்சியில் பைனலுக்கு செல்ல போகும் ஐந்தாவது போட்டியாளர் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு விதமான பாடல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் தான். இந்த நிகழ்ச்சி இதுவரை 2 சீசன்களை கடந்து தற்போது 3வது சீசன் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பாடகர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகளும் கிடைத்து இருக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சி மூன்றாவது சீசன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் அர்ச்சனா தான் தொகுத்து வழங்கி வருகிறார். மொத்தம் இந்த நிகழ்ச்சி 23 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று இருந்தார்கள். இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது.

- Advertisement -

சரிகமப நிகழ்ச்சி :

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீநிவாஸ், கார்த்திக், விஜய் பிரகாஷ், ரம்யா நம்பீசன் ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அக்ஷயா, ஜீவன், புருஷோத்தமன், லக்ஷனா ஆகியோர் நேரடியாக பைனலுக்கு சென்றிருக்கிறார்கள். மீதமுள்ள போட்டியாளர்களில் ஒருவர் அல்லது இரண்டு பேர் தான் பைனலுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

பைனல் செல்லும் போட்டியாளர்:

இந்த நிலையில் இந்த வாரம் போட்டியாளர்களுக்குள் கடுமையான சவால்கள் நிறைந்திருக்கிறது. இந்த வார ரவுண்டின் மூலம் தான் ஐந்தாவது போட்டியாளராக யார்? என்று தெரியும். இதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி வரும் ஜூன் 18ஆம் தேதி மாலை 6 மணி முதல் தொடங்கி கிட்டத்தட்ட 5 மணி நேரம் நேரடியாக ஒளிபரப்ப இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

போட்டியாளர் குறித்த விவரம்:

மேலும், ஒருவரா? அல்லது இரண்டு பேரா? இந்த பைனலுக்கு செல்ல இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ஒளிபரப்பான ப்ரோமோவில் ஏற்கனவே தேர்வான 4 பைனலிஸ்ட்டை தவிர மேலும் 2 பைனலிஸ்ட்டின் புகைப்படத்தை கேள்வி குறியுடன் விட்டு இருக்கிறார்கள். எனவே இந்த சீசனில் 6 பேர் இறுதி போட்டிக்கு செல்லப்போவது உறுதியாகி இருக்கிறது.

Advertisement