விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படத்தை பற்றியும் விஜய்யை பற்றியும் பிஸ்மி என்ற பத்திரிகையாளர் கூறியிருக்கும் கருத்து தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பல காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.
வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு படம் வெளியாக இருக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் மந்தனா, நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவாளராக இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நடந்தது.
மேலும் இப்படடம் வரும் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. அதோடு தமிழ் நாட்டின் மற்றொரு முன்னணி நடிகரான அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படமும் வாரிசு படத்துடன் வெளியாக இருக்கிறது. அதாவது விஜய் மற்றும் அஜித் பல காலங்களுக்கு பிறகு ஒன்றாக மோதிக்கொள்ள இருக்கின்றனர். இதனால் இரு நடிகர்களின் ராசிகர்கள் மத்தியில் பெரும் ஏதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கனனே வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு விஜய்யை NO 1 என்று கூறியது சர்ச்சைக்குள்ளான நிலையில் மீண்டும் ஒரு பிரச்சனை நடந்துள்ளது.
அதாவது பிஸ்மி என்ற பத்திரிகையாளர் ஒருவர் விஜய் தான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார். ரஜினிகாந்த முன்னாள் சூப்பர்ஸ்டார் என்பதை தயாரிப்பாளர் தில் ராஜு கூறவேண்டிய அவசியம் இல்லை. தமிழ் சினிமாவின் ரசிகர்கர்களே விஜய்யை அந்த இடத்திற்கு கொண்டு வைத்து விட்டார்கள் என்று கூறியிருந்தார். இதனால் கொதித்தெழுந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ரசிகர்கள் ரஜினிகாந்தின் சாதனைகளை பட்டியலிட்டு இன்றும், அன்றும், என்றும் அவர்தான் சூப்பர் ஸ்டார் என்பதை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்தின் ரசிகர்கள் 10 பேர் பத்திரிகையாளரான பிஸ்மியின் இல்லத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு யூடியூபில் ரஜினிக்கந்தை விமர்சித்து போட்டுள்ள பதிவை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவரது ரசிகர்கள் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் “ஜெயிலர்” திரைப்படம் கண்டிப்பாக வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் எப்போதும் அவர்தான் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபிப்பார் என்று தங்களுடைய ஆதங்கத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் “ஜெயிலர்” திரைப்படத்தில் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேப்பை பெற்றிருந்தது. அதோடு இப்படத்தை பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் இயக்குகிறார், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ரம்யா கிருஷ்ணன், சிவா ராஜ்குமார், பிரியங்க மோகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விநாயகன் போன்ற பல நடிகர்கள் நடித்து வரும் நிலையில் இப்படம் இந்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.