அப்போது இந்து இப்போது இஸ்லாமா..!மீண்டும் சர்ச்சையை கிளம்பியுள்ள ஹன்ஷிகா போஸ்டர்..!

0
768
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை ஹன்ஷிகா நடிப்பில் வெளியாகவுள்ள ‘மஹா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காவி உடையில் ஹன்ஷிகா கஞ்சா அடிப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் பெரும் வைரலானது.

-விளம்பரம்-

இதனால் ஹன்சிகா மீதும், டைரக்டர் ஜமீல் மீதும் பா.ம.க. பிரமுகர் வழக்கு தொடர்ந்துள்ளார். “புகைப்படம் இந்துக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாகவும், இளம்பெண்களை திசைதிருப்பும் விதமாகவும் உள்ளது” என்று மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் ஹன்சிகா மற்றும் டைரக்டர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்க : காவி உடை அணிந்து புகைபிடித்த ஹன்ஷிகா..!வழக்கு பதிவு செய்த இந்து முன்னணி..!

- Advertisement -

இந்த நிலையில் மஹா படத்தில் ஹன்சிகாவின் இன்னொரு தோற்றத்தையும் படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இந்த புகைப்படத்தில் ஹன்சிகா தொழுகை செய்வதுபோன்றும், பின்னால் நிழல் உருவத்தில் துப்பாக்கியுடன் இருப்பது போன்றும் காட்சி உள்ளது. இந்த புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஹன்சிகா ஏற்கனவே புகைப்பிடிக்கும் சர்ச்சை படம் குறித்து கருத்து கூறும்போது, “மஹா எனது 50-வது படம் என்பதால் பெரிய அளவில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு ஏற்ப படத்தின் போஸ்டர் பற்றி பேசுகிறார்கள். இது ஒரு சாம்பிள்தான். இன்னும் நிறைய விஷயங்கள் படத்தில் உள்ளன” என்று தெரிவித்து இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement