தன்னுடைய திருமணத்தை முன்னிட்டு ஹன்சிகா செய்திருக்கும் செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. ஷக்கலக்கா பூம் பூம் என்ற சீரியலின் மூலம் தான் ஹன்சிகா தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அதன் பின் இவர் இந்தியில் வெளியான கோய் மில் கயா, ஹவா, ஆப்ரா கா டாப்ரா, ஜாகோ, போன்ற பல சீரியல்களில் குழந்தைக்கு நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.
பின்னர் நடிகர் அல்லு அர்ஜின் நடித்திருந்த தெலுங்கில் வெளியான “தேசமுதுரு” என்ற படம் மூலம் தான் ஹன்சிகா வெள்ளித்திரைக்கு முதன் முதலாக அறிமுகமாகினார். அதன் பின்னர் இவர் தனுஷ் நடித்திருந்த “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். அதனை தொடர்ந்து இவர் வேலாயுதம், எங்கேயும் காதல், பிரியாணி, ஆம்பள, புலி, ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம்-2, சேட்டை, ரோமியோ ஜூலியட், போகன், குலேபகாபலி, மான் கராத்தே, அரண்மனை 1 மற்றும் 2 ,என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார்.
ஹன்சிகா திரைப்பயணம்:
மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களில் நடித்து இருக்கிறார். நடிகர் விக்ரம் பிரபு நடித்திருந்த துப்பாக்கி என்ற திரைப்படத்தில் 2018ஆம் ஆண்டு கடைசியாக ஹன்சிகா நடித்திருந்தார். அதன் பின் இவர் கடந்த இரண்டு வருடங்களாக எந்த திரைபடத்தில் நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் வெளியான “மஹா” என்ற திரைப்படத்தில் ஹன்ஷிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் சிம்புவும் நடித்திருந்தார்.
ஹன்சிகா காதலர்:
இந்த படமானது ஹன்சிகாவின் 50வது படமாகும். பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படமானது அந்த அளவிற்கு வெற்றியை கொடுக்க வில்லை. பின் இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இதனிடையே ஹன்சிகா அவர்கள் தனது நீண்ட நாள் நண்பர் மற்றும் தொழில் கூட்டாளியுமான சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக ஷோசியல் மீடியாவில் கூறியிருந்தார்கள்.
ஹன்சிகா திருமணம்:
இவர்கள் 2020ஆம் ஆண்டிலிருந்தே தொழில் கூட்டாளியாக பயணித்து வருகிறார்கள். அனைவரும் எதிர்பார்த்த இவர்களது திருமணமானது 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் நடந்தது. இவர்களது திருமணத்திற்கான கொண்டாட்டம் 3 நாட்களுக்கு முன்னராகவே தொடங்கிவிட்டது. இதில் மெஹந்தி, இசை நிகழ்ச்சிகள் என பல கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருந்தது. மேலும், திருமணத்தின் போது ஹன்சிகா சிவப்பு நிற லெகங்காவை அணிந்திருந்தார். மணமகன் சோஹேல் கிரீம் கலர் ஷெர்வானி அணிந்திருந்தார். இவர்களுடைய திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
ஹன்சிகா செய்த செயல்:
தற்போது இந்த தம்பதிகளின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதற்கிடையே ஹன்சிகா அவர்கள் தன்னுடைய திருமணத்தை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு விருந்து கொடுத்திருக்கிறார். ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையை சுற்றி வசிக்கும் குழந்தைகளுக்கு திருமண உணவுகளை வழங்க ஹன்சிகா தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்திருந்தார்.
நயன்தாராவை மிஞ்சிய ஹன்சிகா :
அதோடு இந்தியா முழுவதும் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு தன்னுடைய திருமண நாளில் சுவையான உணவை வழங்கி இருக்கிறார். இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியானது தொடர்ந்து பலரும் ஹன்சிகாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். நயன்தாரா கூட தனது திருமணத்தின் போது 1 லட்சம் ஆதரவற்றோருக்கு மட்டுமே அன்னதானம் அளித்தார். ஆனால், ஹன்சிகா இந்தியா முழுதும் இதை செய்து நயனையே மிஞ்சி ரியல் லைஃப் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து இருக்கிறார்.