தமிழ் சினிமாவில் தனது சொந்த திறமையால் எந்த ஒரு பின்பலமுமும் இல்லாமல் பாடகராக இருந்து வந்தவர்கள் மிகவும் சொற்பமே. அந்த வகையில் வைக்கோம் விஜயலக்ஷ்மியை இசை அந்த அனைவருக்கும் தெரியும். உடலால் ஊனமுற்றாலும் தனது வித்யாசமான குரலால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் பின்னணி பாடகி வைக்கோம் விஜயலக்ஷ்மி. குக்கூ படத்தில் “கொடையில மழை போல ” என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார்.
பின்னர் தமிழில் எண்னெற்ற படலங்களை பாடியுள்ளார். இவற்றில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான நடிகர் சூர்யா நடித்திருந்த “ஜெய் பீம்” திரைப்படத்தில் வரும் ‘மண்ணிலே ஈரம் உண்டு’ பாடலானது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றியிருந்தது அதோடு அந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்தது. அதுமட்டுமில்லாமல் தன்னுடைய கணீர் குரலால் தமிழ் மற்றும் மலையாளம் என பல திரைப்படங்களில் பாடல்களை பாடி அசத்தியவர்.
இந்நிலையில் பாடகி வைக்கோம் விஜயலக்ஷ்மி கடந்த 2018ஆம் ஆண்டு மிமிக்ரி கலைஞர் மேரி அனுப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணமானது ஹாதேவ் கோவிலில் நடைபெற்றது. ஆனால் திருமணமாகி வெறும் 3 ஆண்டுகளில் குடும்ப வாழ்கையில் ஏற்பட்ட மனக்கசப்புகளின் காரணமாக இவர்கள் இருவரும் கடந்த 2021ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்து விட்டனர்.
இந்நிலையில் பிரபல செய்தி ஊடகத்தில் ஒளிபரப்பாகும் “மனிதி வா” என்ற நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு நடிகை கௌதமி தொகுப்பாளராக இருந்தார். அந்த நிகழ்ச்சியில் பாடகி வைக்கோம் விஜயலக்ஷ்மி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டிருந்தார். அதில் தான் திருமணம் செய்து கொண்டபின் நடந்த நிகழ்வுகளையும் அவர் ஏன் மிமிக்ரி கலைஞர் மேரி அனுப்பை விவாகரத்து செய்தார் என்பதையும் கூறியிருந்தார்.
அந்த பேட்டியில் பாடகி வைக்கோம் விஜயலக்ஷ்மி கூறியதாவது `தனக்கு திருமணமாகிய பின் தன்னுடைய வாழ்கை மிகவும் கண்ணீர் நிறைந்திருந்தாக கூறியிருந்தார். திருமணம் செய்து கொண்ட பின்னர் தான் பாடிய பாடல்களை விமர்சனம் செய்வது மட்டுமில்லாமல் தன்னுடைய வாழ்கையிலும் பல நிபந்தனைகளை அவருடைய கணவரான மேரி அனுப் விதித்ததாகவும், ஒரு சேடிஸ்ட்( துன்பத்தில் இன்பம் காண்பவர்) போல நடந்து கொண்டதாகவும் பாடகி வைக்கோம் விஜயலக்ஷ்மி கூறியிருந்தார்.
அதோடு தன்னை குடும்பத்தினருடன் இருந்து பிரிக்க முயற்ச்சி செய்ததாகவும் குற்றம் சாட்டினார். மேலும் வாழ்க்கையில் ஓரளவுக்குத்தான் வலியை தாங்க முடியும் என்றும், அதற்கு உதாரமனாக ஒருவருக்கு பல்லில் வலி ஏற்பட்டால் அதனை பொறுத்துக்கொள்ளலாம் அதே அந்த வலி அதிகமானால் அதனை பிடுங்குவதை தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார். மேலும் தான் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் எனவே பாடுவதை இழந்த வாழ்க்கையை நான் வாழ விரும்பவில்லை என்று பாடகி வைக்கோம் விஜயலக்ஷ்மி அந்த பேட்டியில் நடிகை கௌதமியுடம் கூறினார்.