இனி சினேகா நடிப்பது சந்தேகமே.! பிரசன்னா சொன்ன தகவல்.! இருப்பினும் குவியும் வாழ்த்து.!

0
39480
Sneha
- Advertisement -

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகள் என்றதும் அந்த லிஸ்டில் மிகவும் குயூடான கபுல் லிஸ்டில் சினேகா மற்றும் பிரசன்னாவும் வந்துவிடுவார்கள். புன்னகை அரசி என்றவுடன் நமது நினைவிற்கு முதலில் வருவது இவர் தான். ஜீன்ஸ் டாப்ஸ் என்று கதாநாயகிகளை பார்த்து போர் அடித்து போன ரசிகர்களுக்கு குடும்ப குத்து விளக்காக அறிமுகமானார் தான் நடிகை சினேகா.

-விளம்பரம்-

அதே போல தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக அறிமுகமான நடிகர் பிரசன்னா பின்னர் தமிழில் மிரட்டலான வில்லன், அற்புதமான நடிகர் என்ற பெயரையும் எடுத்தார். சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் கடந்த 2012 ஆம் ஆண்டு காதலித்து பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

இதையும் பாருங்க : லாஸ்லியாவை மீண்டும் வெக்கப்பட வைத்த கவின்.! அப்படி என்ன சொன்னார்னு கேளுங்க.! 

- Advertisement -

திருமணத்திற்கு பின்னர் இவர்கள் இருவருக்கும் 2015 ஆம் ஆண்டு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த சினேகா பின்னர் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினர்.

Image result for sneha prasanna

சமீபத்தில் சினேகாவின் கணவர் பிரசன்னாவிற்கு கலைமாமணி விருதும் கிடைத்தது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரசன்னா, தற்போது சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாகவும் விரைவில் இன்னொரு குட்டி வீட்டிற்கு வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் பிரசன்னா சினேகா தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கர்ப்பமாக இருப்பதால் சினேகா சிறுது மாதங்கள் சினிமாவில் நடிக்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement