2010ல் பாடகர், தற்போது பாடகி – ஆள் மட்டுமல்ல குரலையும் பெண்ணாக மாறியுள்ள இந்த சூப்பர் சிங்கர் யார் தெரியுதா?

0
473
- Advertisement -

பாட்டு நிகழ்ச்சிகளில் வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டது குறித்து திருநங்கை ஐஸ்வர்யா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே திருநங்கைகள் பல்வேறு துறையில் சாதித்து வருகிறார்கள். அதோடு மக்கள் மத்தியிலும் அவர்களுக்கு நல்ல அங்கீகாரமும் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் 13 வருடம் கழித்து திருநங்கை ஐஸ்வர்யா பாடியிருக்கும் பாடல் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர் திருநங்கை ஐஸ்வர்யா. இவர் பழனியை சேர்ந்தவர். இவருக்கு சிறுவயதில் இருந்து பாடல் பாடுவதில் அதிக ஆர்வம். இதனால் இவர் ஹரியுடன் நான் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். ஆனால், இவர் முறையாக பாட்டு கற்றுக்கொண்டு பாடணும் என்று நடுவர்கள் கூறியிருந்தார்கள். அதற்குப் பின் இவர் பெண்ணாக மாறியிருக்கிறார். மேலும், இவர் தன்னுடைய திருநங்கை நண்பர்களுடன் சேர்ந்து youtube சேனல் ஒன்று நடத்தி வருகிறார்.

- Advertisement -

திருநங்கை ஐஸ்வர்யா:

அதில் சமைக்கும் வீடியோ, பாடுவது, டான்ஸ் ஆடுவது போன்ற பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதன் மூலம் தான் இவர் பேமஸ் என்றே சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் இவர் சில படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் அண்மையில் திருநங்கை ஐஸ்வர்யா பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், நான் பழனியை சேர்ந்தவர். எனக்கு சிறுவயதிலிருந்தே பாட்டு பாடுவது என்றால் ரொம்ப பிடிக்கும். நான் எட்டாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறேன். அதற்குப் பிறகு பாடல் பாடல் என்று சென்று விட்டது.

திருநங்கை ஐஸ்வர்யா பேட்டி:

சின்ன வயதிலிருந்தே என் உடலில் மாற்றம் ஏற்பட்டது. இது குறித்து என்னுடைய பெற்றோர்களிடம் கூறினேன். ஆனால், அவர்கள் சமுதாயத்திற்கு பயந்து என்னை திட்டி மிரட்டி மறைத்து விட்டார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் என்னுடைய உடல் மாற்றம் மறைக்க முடியவில்லை. அதற்கு பிறகு தான் நான் திருப்பூரில் உள்ள திருநங்கை சங்கத்தில் சேர்ந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். பின் என்னுடைய பெற்றோர்களும் உனக்கு பிடித்ததை செய் என்று சொல்லிவிட்டார்கள். எப்பவாவது அம்மாவிடம் போனில் பேசுவேன். அவரும் என்னிடம் பேசுவார். அதேபோல் நான் ஆடிசனுக்கு செல்வது பற்றி அவரும் பாராட்டுவார். நான் இப்படி பாடுவதற்கு காரணம் என்னுடைய அம்மா தான்.

-விளம்பரம்-

ஹரியுடன் நான் நிகழ்ச்சி:

சிறு வயதில் அவர்களுடைய பாடல்களை கேட்டு தான் எனக்கும் பாடுவது மீது ஆர்வம் வந்தது. அப்படி தான் ஹரியுடன் நான் நிகழ்ச்சியில் கலந்து இருந்தேன். 13 வருடம் கழித்து இப்போது இந்த பாடல் பிரபலமாக இருப்பதை நினைத்து சந்தோஷப்படுவதா? வேதனைப்படுவதாக? என்று எனக்கு தெரியவில்லை. அப்போது சரியான பயிற்சி இல்லாததால் என்னை நிராகரித்து விட்டார்கள். அதற்குப் பிறகு நான் சில வருடங்கள் இசையை கற்றுக் கொண்டேன். இப்போது ஓரளவு இசை பற்றி தெரியும். திருநங்கையாக மாறிய பிறகு என்னுடைய குரலும் ஆணாக இருப்பதை நினைத்து கொஞ்சம் வருத்தப்பட்டேன். ஆனால், என்னுடைய தோழிகள் அதெல்லாம் பிரச்சனை இல்லை நீ பாடு உன்னால் முடியும் என்றெல்லாம் சொன்னார்கள்.

வாய்ப்பு நிராகரிப்பு:

முதலில் தயங்கினேன். அதற்குப் பிறகு எங்கு பார்த்தாலும் என்னை பாட சொல்வதைக் கேட்டால் சந்தோஷமாக இருக்கிறது. நான் youtube சேனல் ஒன்றும் நடத்தி வருகிறேன். நான் பாடுவதை கேட்டு மக்கள் என்னை ஏற்றுக் கொண்டார்கள். நான் நிறைய ஆடிசன் சென்று இருக்கிறேன். பல இடங்களில், நீங்கள் திருநங்கை தானே, எப்படி உங்களை எடுத்துக்கொண்டு செல்வது என்று வாய்ப்பை நிராகரித்து இருக்கிறார்கள். ஆனால், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் அப்படியெல்லாம் இல்லை. நான் இந்த நிகழ்ச்சியில் 9வது சீசனில் கலந்து கொண்டேன். டாப் 30 வரை சென்றேன். அதற்குப் பிறகுதான் வெளியேறி விட்டேன். திருநங்கைகளாலும் சாதிக்க முடியும். அதற்கு ஒரு முன் உதாரணமாக இருக்கணும் நினைக்கிறேன் என்று பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement