மறைந்த நடிகர் விவேக்கின் மகளுக்கு எளிமையாக திருமணம் நடைபெற்று இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கோலிவுட்டில் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை பெற்று என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் நடிகர் விவேக். இவர் 1990களின் தொடக்கத்தில் காமெடி நடிகராக தன் பயணத்தை தொடங்கி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
பின் ஹீரோவாகவும் இவர் சில படங்களில் நடித்திருந்தார். அதோடு இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் இருந்தார். அதிலும் இவர் மறைந்த அப்துல்கலாமின் தீவிர ரசிகர். அவர் மீது கொண்ட பற்றின் காரணமாக இவர் லட்ச கணக்கான மரங்களை நட்டு இருந்தார். அதுமட்டும் இல்லாமல் 1 கோடி மரங்களை நடுவது தான் இவரின் கனவாக இருந்தது. ஆனால், கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
விவேக் மறைவு:
மேலும், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருந்தது. பின் இயக்குனர் சுந்தர் சியின் இயக்கத்தில் ஆர்யா நடித்து இருந்த அரண்மனை 3 திரைப்படத்தில் விவேக் நடித்து இருந்தார். இந்த படம் விவேக் மறைவுக்கு பின் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விவேக் மறைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. அதோடு விவேக்கின் கிரீன் கலாம் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தை விவேக் அவர்களின் நண்பரும், நடிகருமான செல் முருகன் தொடங்கி இருக்கிறார்.
தற்போது விவேக் விட்டு சென்ற மரம் நடும் பணியை அவருடைய மனைவி அருள் செல்வி தொடங்கி இருக்கிறார். இது குறித்து அவர், என் கணவரிடம் கலாம் ஐயா ஒரு கோடி மரங்கள் நடும் பணியை கொடுத்திருந்தார். அவர் வாழ்நாளில் 37 லட்சம் மரக்கன்றுகளை நட்டிருக்கிறார். தேசிய சுற்றுச்சூழல் நிறுவனத்தோடு இணைந்து நான் இப்போது அப்பணியினைத் தொடர்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதன் பின் விவேக் நினைவாக அவர் வசித்து வந்த பெருநகர சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள பத்மாவதி நகர் பிரதான சாலையை ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ என பெயர் மாற்றம் செய்து இருக்கிறது.
விவேக் குடும்பம்:
இந்த நிலையில் மறைந்த நடிகர் விவேக்கின் மகளுக்கு திருமணம் ஆகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விவேக்கிற்கு பிரசன்னா குமார், அமிர்த நந்தினி, தேஜஸ்வினி என்று மூன்று பிள்ளைகள். இதில் பிரசன்ன குமார் என்பவர் 2015 ஆம் ஆண்டு மூளை காய்ச்சல் ஏற்பட்டு இறந்துவிட்டார். இந்த நிலையில் தற்போது விவேக் உடைய மூத்த மகள் தேஜஸ்வினிக்கு தான் திருமணம் நடைபெற்று இருக்கிறது.
விவேக் மகள் திருமணம்:
இவர் பரத் என்பவரை தான் திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுடைய திருமணத்தில் குடும்ப உறவினர்கள் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார்கள். இவர்களுடைய திருமணம் சென்னை சின்ன கலைவாணர் சாலையில் இருக்கும் அவர்களுடைய வீட்டில் தான் எளிமையாக நடைபெற்றிருக்கிறது. மேலும், மணமக்கள் இருவருமே மரக்கன்றுகள் மற்றும் மூலிகை செடிகளை நட்டிருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் தங்களை வாழ்த்தியவர்களுக்கும் மரக்கன்றுகளை பரிசாக கொடுத்திருக்கிறார்கள்.