தகவல் அறிந்த உடனே அஜித் சார் நேரில் வந்து – வெள்ளநீரில் இருந்து மீட்கப்ட்ட பின் விஷ்ணு விஷால் பகிர்ந்த தகவல்.

0
185
- Advertisement -

கடந்த சில தினங்களாகவே ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு கொண்டு வருகிறது. இந்த புயல் வங்கக் கடலில் உருவாகி இருக்கிறது. இந்த மிக்ஸாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல இடங்களில் அதிகமான மழை பெய்து வருகிறது.இதனால் பள்ளி, கல்லூரி மட்டும் இல்லாமல் சில தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடுத்திருக்கிறார்கள். பலருமே வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

-விளம்பரம்-

மேலும், இன்று காற்றின் வேகம் குறைந்து மழை பெய்யும் அளவும் குறைந்திருப்பதால் மீட்பு பணிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்த புயலால் சாதாரண மக்கள் மட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்கள் பலருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில் நேற்று நடிகர் விஷால், தன்னுடைய வீட்டில் தண்ணீர் புகுந்து புகுந்திருப்பதை குறித்து மாநகராட்சி மேயரையும் அதிகாரியையும் விமர்சித்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.

- Advertisement -

குறிப்பாக, சென்னை மழைநீர் வடிகால் பணிகளுக்காக அரசு 4000 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தது. அதெல்லாம் என்ன ஆனது? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலும் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், காரப்பாக்கத்தில் உள்ள என் வீட்டுக்குள் தண்ணீர் வந்துவிட்டது. அதன் அளவும் போகப்போக மோசமாக உயர்ந்து வருகிறது.உதவி கேட்டு அழைத்திருக்கிறேன்.

இங்கு கரண்ட் இல்ல, வைஃபை இல்ல, போன் சிக்னல் இல்ல, எதுவுமே இல்ல. என் வீட்டு மொட்டை மாடியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சிக்னல் கிடைக்கிறது. எனக்கும் இங்கு இருப்பவர்களுக்கும் உதவி கிடைக்கும் என நம்புகிறேன். சென்னை மக்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என கூறி தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் இருந்து எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த புகைப்படத்தில் விஷ்ணு விஷாலின் வீட்டை சுற்றி தண்ணீர் சூழ்ந்து இருக்கிறது. இதனை தொடர்ந்து காரப்பாக்கம் பகுதியில் சிக்கிய மக்களை தமிழக தீயணைப்புத் துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இப்படி இவர் பதிவிட்ட 4 மணி நேரத்தில் மீட்பு குழு இவரது பகுதிக்கு சென்று இவரை படகில் ஏற்றி வந்து இருக்கிறது. நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது குடும்பத்தினர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் தன்னுடைய தாயாரின் சிகிச்சைக்காக கடந்த இரு மாதங்களாக சென்னை காரப்பாக்கத்தில் வீடு எடுத்து தங்கியிருந்த நடிகர் அமீர்கானையும் தீயணைப்புத் துறை வீரர்கள் பத்திரமாக போட் மூலம் மீட்டுள்ளனர்.

மேலும், இதுவரை தங்கள் குடியிருப்பில் இருந்து சில வயதான நபர்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட நபர்கள் மீட்கப்பட்டதாகவும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இந்த சம்பவத்தை அறிந்த அஜித், நேரில் வந்து தங்களை பார்த்ததாகவும் எங்கள் குடியிருப்பு வாசிகள் வெளியில் செல்ல ஏற்பாடுகளை செய்ய உதவியதாகவும் அஜித் மற்றும் அமீர்கானுடன் எடுத்த புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Advertisement