விக்ரம் படத்தில் இடம்பெற்ற ‘சக்கு சக்கு’ பாடலுக்கும் தனக்கும் உள்ள தொடர்பு குறித்து ஹாரிஸ் ஜெயராஜ் போட்ட பதிவு. என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
724
harris
- Advertisement -

விக்ரம் படத்தில் இடம் பெற்ற பழைய பாடல் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதோடு இந்த பாடல் எந்த படம்? யாருடைய பாடல்? என்று ரசிகர்கள் தேடி கொண்டு இருக்கின்றார்கள். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. படத்தில் கமலின் மகனாக காளிதாஸ் நடித்திருக்கிறார். போதை பொருள் கடத்தல் கும்பலால் கமலின் மகன் கொல்லப்படுகிறான். இதை அறிந்த கமல் தன் மகனைக் கொன்றவர்களைத் பழிவாங்க நினைக்கிறார்.

- Advertisement -

விக்ரம் படம் பற்றிய தகவல்:

பின் அடுத்தடுத்து நடக்கும் சுவாரஸ்யமே படத்தின் கதை. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள். படத்தின் திரைக்கதையில் உள்ள வேகமும், விறுவிறுப்பும் பார்வையாளர்களை பார்க்க தூண்டுகிறது. ஒவ்வொரு காட்சியிலும் கமலும், லோகேஷ் கனகராஜூம் மெனக்கெட்டு மாஸ் காட்டி இருக்கிறார்கள். விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது.

விக்ரம் படத்தின் பாடல்கள்:

இந்நிலையில் விக்ரம் படத்தில் இடம் பெற்ற பழைய பாடல் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் படங்களில் பாடல்களுக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. மாநகரம், கைதி படங்களில் பின்னணி இசை தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதேபோல் கைதி, விக்ரம் படத்திலும் முக்கியமான கட்டத்தில் இரண்டு பழைய பாடல்கள் ஒலிக்கும். கைதி படத்தில் காவல் நிலையத்தை சுற்றி வளைத்த ரவுடிகளிடம் இருந்து தப்பிக்க ஜும்பலக்கா ஜும்பலக்கா, ஆசை அதிகம் வச்சு என்ற பாடல் ஒலிக்கும்.

-விளம்பரம்-
இசையமைப்பாளர் ஆதித்யன்

சக்கு சக்கு வத்திக்குச்சி பாடல்:

இதை தொடர்ந்து தற்போது விக்ரம் படத்தில் ஆரம்பத்தில் கமலின் காரில் சக்கு சக்கு வத்திக்குச்சி என்ற ஒலிக்கிறது. படம் பார்த்தவர்கள் இது என்ன பாடல்? எந்த படம் என்று கேள்வி எழுப்பினார்கள். இந்த பாடல் அருண்பாண்டியன் நடிப்பில் 1995 இல் வெளியான அசுரன் திரைப்படத்தில் வரும் பாடல். தற்போது இந்த பாடலை திரும்பத் திரும்ப ரசிகர்கள் பாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு பாடலை இன்றைய இளைஞர்களுக்கு கொடுத்ததற்கு இயக்குனருக்கு ஒரு பெரிய பாராட்டுதான்.

ஹாரிஸ் போட்ட பதிவு :

இப்படி ஒரு நிலையில் இந்த பாடல் குறித்து சுவாரசியமான தகவல் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார் இசையமையாளர் ஹாரிஸ் ஜெயராஜ். அதில் ”சக்கு சக்கு வத்திக்குச்சி’ பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் ப்ரோகிராமிங் செய்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்தான ட்விட்டர் பதிவில், ” ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’, திரு.ஆதித்தன் இசையமைத்து, நான் ப்ரோகிராம் செய்த இந்த விண்டேஜ் பாடல் வைரலாகி வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement