லோகேஷ் கனகராஜூக்கு கமல் எழுதி இருக்கும் கடிதம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள்.
விக்ரம் படம் பற்றிய தகவல்:
விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. இதுவரை விக்ரம் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் தற்போது கமலஹாசன் தன்னுடைய ரசிகரும், விக்ரம் பட இயக்குனருமான லோகேஷ் கனகராஜுக்கு கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் கமல் கூறியிருப்பது, அன்பு லோகேஷ் பெயருக்கு முன் திரு போடாமல் விட்டது விபத்தல்ல.
கமல் எழுதிய கடிதம்:
திரு கனகராஜ் அவர்களுக்கு உங்கள் பால் உள்ள உரிமையை உங்களைக் கேட்காமலே நான் எடுத்துக் கொண்டு விட்டேன். இது நமக்குள்ளான தனிப்பட்ட கடிதம் என்பதால்.மற்றபடி உங்கள் சாதனைகளுக்கான பதவிக்கான மரியாதை பழைய படியே தொடரும். பொதுவெளியில் என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களை விட வித்தியாசமானவர்கள் ஆக இருப்பது அவசியம் என்ற என் ஆசை பேராசை என்றனர் என் விமர்சகர்கள்.
லோகேஷ் குறித்து கமல் சொன்னது:
ஆனால், அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர் முன்னணி திறமையாளராகவும் இருப்பது நான் ஆசைப்பட்டதை விட அதிகம். உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நான் உட்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம். யூடியூபைத் திறந்தால் வார்த்தைகளின் களஞ்சியமே தென்படும். அதில் உள்ள திரு லோகேஷ் கனகராஜ் தோத்திர மாலையில் இருந்து யார் வேண்டுமானாலும் வார்த்தை மலர்களையும் எடுத்துக்கொள்ளலாம். இவை எல்லாம் தொடர வாழ்த்துக்கள்.
உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை என நான் உள்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம்
அயராது…
விழித்திருங்கள்
தனித்திருங்கள்
பசித்திருங்கள்
உங்கள் அன்ன பாத்திரம்
என்றும் நிறைந்திருக்கும்
உங்கள் நான்
கமல்ஹாசன்
என்று லோகேஷ் கனகராஜை பாராட்டி கடிதம் எழுதி இருக்கிறார். இதை லோகேஷ் கனகராஜ் தற்போது தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டு நெகிழ்ச்சியில் ”லைப் டைம் செட்டில்மென்ட் லெட்டர்’ இதை படிக்கும் போது நான் எப்படி உணர்ச்சிவசப்பட்டேன் என்பதை வார்த்தைகளால் கூற முடியாது. நன்றி ஆண்டவரே! என்று குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இந்த கடிதம் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.