காலா கெட்டப்பில் சென்ற காமெடி நடிகை..? அச்சர்யப்பட்ட ரசிகர்கள்..!

0
739
kaala

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்று நாம் அனைவர்க்கும் தெரியும். பொதுஜன ரசிகர்களை தவிர சினிமா துறையில் இருக்கும் பல நடிகர், நடிகைகள் ரஜினியின் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

harthiganesh

நேற்று (ஜூன் 7) ரஜினி நடித்த காலா படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் பெரிது எதிர்பார்த்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த படத்தை பல்வேறு சினிமா ரசிகர்களும் திரையரங்கில் நேரில் சென்று கண்டுகளித்து வருகின்றனர்.

harthi-Ganesh.

இந்நிலையில் சினிமா நகைச்சுவை நடிகையான ஆர்த்தி கணேஷ் ‘காலா’ படத்தை பார்க்க நேற்று திரையரங்கிற்கு சென்றுள்ளார். நடிகை ஆர்த்தி ரஜினியின் தீவீர ரசிகை என்பதால் அதனை நிரூபிக்கும் வகையில் நேற்று திரையரங்கிற்கு சென்ற நடிகை ஆர்த்தி, கருப்பு வேட்டி மற்றும் சட்டையில் காலா படத்தில் நடித்துள்ள ரஜினியின் கெட்டப்பில் சென்றுள்ளார்.

harthi

நடிகை ஆர்த்தியை காலா கெட்டிப்பில் பார்த்த ரஜினி ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். மேலும் ‘காலா’ படத்தை தனது கணவர் மற்றும் நண்பருடன் பார்த்த நடிகை ஆர்த்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் ‘காலா’ படத்தை பற்றி பாராட்டியதுடன் , படத்திற்கு 4/5 என்று மதிப்பெண்ணையும் வழங்கியுள்ளார்.