காலா படத்தில் ரஜினியுடன் இருக்கும் நாயின் தற்போதைய மதிப்பு எவ்வளவு தெரியுமா ?

0
1072
Kaala dog
Kaala dog

கபாலி படத்திற்கு பிறகு இயக்கனுர் ரஞ்சித் ரஜினியை வைத்து இயக்கிய படம் காலா. எதிர்பார்த்த வசூலை இந்த படம் பெறாத போதிலும், ஏற்படுத்தியது. மேலும் இந்த படத்தில் வந்த ஜீப், பைக் அனைத்துமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

kalar ajini

இந்த படத்தின் போஸ்டர் வெளியான போது சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு கருப்பு ஜீப் மீது அமர்ந்திருப்பார்.அந்த ஜீப் யாருடையது ???மேலும் அந்த படத்தில் ரஜினியுடன் ஒரு நாயும் இருக்கும் அந்த நாயை இவ்வளவு விலை கொடுத்து வாங்கவும் தயாராக உள்ளார்களா?? போன்ற கேள்விகளுக்கான விடைகள் தற்போது நமக்கு கிடைத்துள்ளது.

kaala-poster

காலா படத்தில் ரஜினியுடன் இருக்கும் நாயின் உரிமையாளரின் பெயர் சைமன். சமீபத்தில் இவர் தனியார் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அதில் காலா படத்தின் சில ஸ்வரசியமான செய்திகளை பகிர்ந்துள்ளார்.

Kaala

காலா படத்தில் ரஜினியுடன் நடித்துள்ள நாயின் பெயர் மணி. ‘இந்த நாயை பலரும் சுமார் 2 கோடி ரூபாய் வரை விலைக்கு கேட்கின்றனர். ஆனால் மணியை விற்க எனக்கு விருப்பம் இல்லை. இது ரஜினியுடம் நடித்த நாய். இந்த நாய் மீது ரஜினி மிகவும் அன்பு கொண்டிருந்தார். படப்பிடிப்புக்கு வரும் போது மணிக்கு, தலைவர் பிஸ்கேட் வாங்காமல் வர மாட்டார். அப்படிப்பட்ட நாயை நான் எப்படி விற்பேன்’ என்று அந்த நாயின் உரிமையாளர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.