இப்படிலாம் பண்ணா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் – இளவரசுவுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை. என்ன காரணம்.

0
333
- Advertisement -

நடிகர் இளவரசுக்கு ஐகோர்ட் கொடுத்திருக்கும் எச்சரிக்கை தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் இளவரசு. இவர் பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களில் தான் படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் ஒளிப்பதிவாளரும் ஆவார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தி நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.

-விளம்பரம்-

இந்த புகார் குறித்து எந்த ஒரு விசாரணையும் செய்யவில்லை, வழக்கில் முன்னேற்றமும் தெரியவில்லை என்று கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விசாரணையை விரைவாக முடித்து இறுதி அறிக்கையை நான்கு மாதத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், போலீஸ் விசாரணை நடத்தியும் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கவில்லை.

- Advertisement -

இளவரசு கொடுத்த புகார்:

இதனால் ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அதன் செயலாளரும், நடிகருமான இளவரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது காவல்துறை வழக்கறிஞர், டிசம்பர் 12ஆம் தேதி நடிகர் இளவரசு காவல் நிலையத்தில் ஆஜரான சிசிடிவி காட்சிகளை சமர்ப்பித்து இருந்தார். ஆனால், இதற்கு இளவரசு மறுப்பு தெரிவித்து இருந்தார். பின் தான் டிசம்பர் 13ஆம் தேதி தான் காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததாக கூறியிருந்தார்.

போலீஸ் விசாரணை:

அதோடு டிசம்பர் 12ஆம் தேதி சென்னை அடுத்த மகாபலிபுரம் படப்பிடிப்பில் இருந்ததாகவும், காவல்துறையினர் சமர்ப்பித்த சிசிடிவி காட்சிகள் எல்லாம் போலி என்றும் கூறியிருக்கிறார். இதை அடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் குறிப்பிட்ட தேதியில் நடிகர் இளவரசு எங்கு இருந்தார்? என்பதற்கான மொபைல் லொகேஷன் விவரங்களையும், சி டி ஆர் என்று சொல்லக்கூடிய மொபைல் அழைப்பு விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

-விளம்பரம்-

இளவரசு வாக்குமூலம்:

இதன் பிறகு இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி நடிகர் இளவரசியின் மொபைல் லொகேஷன் விவரங்கள் மற்றும் ctr விவரங்களை தாக்கல் செய்திருந்தார். அதில் இளவரசு தரப்பில் பன்னிரெண்டாம் தேதி படப்பிடிப்பில் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், அவர் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் மாமல்லபுரம் செல்லவில்லை என்றும் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நீதிபதி எச்சரிக்கை:

மேலும், காவல்துறை கொடுத்த விபரங்களை எல்லாம் விசாரித்த நீதிபதி, இளவரசு காவல் நிலையத்தில் ஆஜரான ஆதாரங்கள் இருக்கின்றது. நீதிமன்றத்தில் பொய் சொல்ல வேண்டாம். டிசம்பர் 12ஆம் தேதி காவல் நிலையத்தில் ஆஜரானதை கூறி மன்னிப்பு ஏற்க தயாராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை இளவரசு சந்திக்க நேரிடும். இந்த விசாரணையை வருகிற ஜனவரி 30 ஆம் தேதிக்கு நாளைக்குஒத்திவைக்கப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement