ஒரே இயக்குனரின் இயக்கத்தில் நடிகர்கள் நடித்திருக்கும் படம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்கள் பலரும் ஒரே இயக்குனரின் இயக்கத்தில் பல படத்தில் நடித்திருக்கிறார்கள். அந்த படங்கள் எல்லாமும் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களும் ஒரே இயக்குனரின் பல படங்களில் நடித்திருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நடிகர்களின் பட்டியல் இதோ,
சத்யராஜ்:
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சத்யராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். இவர் இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் உடன் இணைந்து 25 படங்களில் நடித்திருக்கிறார். அதில் ஆறு படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட் அடித்து இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமைதிப்படை, மாமன் மகள், சின்னதம்பி பெரியதம்பி, 24 மணி நேரம், தெற்கு தெரு மச்சான், புது மனிதன் போன்ற படங்கள் மணிவண்ணன்- சத்யராஜ் கூட்டனில் வெளியாகியிருந்தது.
ரஜினிகாந்த்:
கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட். இவர் ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பின் ஹீரோவாக நடித்து தற்போது கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருக்கிறார். மேலும், ரஜினி- முத்துராமன் கூட்டணியில் 24 படங்கள் வெளிவந்து இருக்கிறது. அதோடு ரஜினிக்கு பலவிதமான கதாபாத்திரங்களை கொடுத்து அவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஆக்கியவர்களில் முத்துராமனும் ஒருவர்.
விஜயகாந்த்:
கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார். மேலும், விஜயகாந்த்- எஸ் ஏ சந்திரசேகர் கூட்டணியில் 19 படங்கள் வெளியாகியிருக்கிறது. அதுவும் நெஞ்சிலே துணிவிருந்தால், நீதியின் மறுபக்கம், செந்தூரப்பாண்டி போன்ற பல சூப்பர் ஹிட் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.
சரத்குமார்:
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக சரத்குமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது இவர் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவரை சுப்ரீம் ஸ்டார் என்று தான் பலரும் அழைப்பார்கள். சரத்குமார்-கே எஸ் ரவிக்குமார் கூட்டணியில் 12 படங்கள் வெளியாகி இருக்கிறது. இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. புரியாத புதிர், சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, பேண்டு மாஸ்டர், நாட்டாமை, நட்புக்காக, பாட்டாளி, சமுத்திரம், பாறை, ஜக்குபாய் போன்ற பல படங்களில் இருவரும் பணியாற்றி இருக்கிறார்கள்.