ஐஸ்வர்யா ராயின் கைக்கு ஆப்ரேஷன். வீட்டில் நடந்தது என்ன? – ரசிகர்களின் கேள்விக்கு பதில் இதோ

0
281
- Advertisement -

பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பிரான்சில் நடந்த கான் திரைப்பட விழாவில் பெரிய கட்டுடன் காணப்பட்டதை தொடர்ந்து, இப்போது அவருக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பதற்கான விடை தான் இணையதளத்தில் பரவி வருகிறது. வருடம் வருடம் புதிது புதிதாக எத்தனை உலக அழகிகள் வந்தாலும் மக்கள் மனதில் இருந்து என்றும் நீங்காத உலக அழகியாக இருப்பவர் நம்ம ஐஸ்வர்யா ராய்.

-விளம்பரம்-

மேலும் இவர் 1994 ஆம் ஆண்டு ‘மிஸ் இந்தியா’ பட்டத்தை வென்றவர். இவருடைய கண் அழகிற்கும், நடிப்பிற்கும் தற்போது கூட ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவரும் இவர் 1997 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய ‘இருவர்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆனார்.

- Advertisement -

ஐஸ்வர்யா ராய் நடித்த படங்கள் :

அதனை தொடர்ந்து இவர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற பல படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். இருந்தாலும் இவர் பாலிவுட் படங்களில் தான் அதிகம் நடித்து இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் இவர் படங்களில் நடித்து வருகிறார்.

கான் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா:

கான் திரைப்பட விழா என்பது பிரான்ஸ் நாட்டில் கான் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு பண்பாட்டு திரைப்பட விழாவாகும். இதில் நடிகை ஐஸ்வர்யா ராய் கையில் பெரிய கட்டுடன் கலந்து கொண்டதோடு, அந்த திரைப்பட விழாவில் நடந்த சிவப்பு கம்பள வரவேற்பு வாக்கிங்கிலும் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆனது என்றும், எப்படி காயம் ஏற்பட்டது என்பது குறித்தும் ரசிகர்களும், நலன் விரும்பிகளும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா ராயின் கட்டிற்கான காரணம்:

இப்போது ஐஸ்வர்யா ராயின் கட்டிற்கான காரணம்தான் இணையத்தில் பரவி வருகிறது. இம்மாதம் 11ஆம் தேதி ஐஸ்வர்யா ராய் வீட்டில் இருந்தபோது எதிர்பாராத விதமாக தடுக்கி விழுந்ததாகவும், அதில் அவரது ஒரு கை உடைந்து விட்டதாகவும் தெரிகிறது. மேலும் கவனமாக இருக்கும் படியும், மேற்கொண்டு காயம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்றும் டாக்டர்கள் கேட்டுக் கொண்டார்களாம். அதனால் சம்பவம் நடந்து இரண்டு நாள் கழித்து தான் திரைப்பட விழாவிற்கு கலந்து கொள்வதற்கான காஸ்டியூம் குறித்து ஐஸ்வர்யா முடிவு செய்தாராம்.

அதனைத் தொடர்ந்து கையில் அதிக அளவில் வீக்கம் இருந்ததால் வீக்கம் குறைந்த பிறகு தான் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும், திரைப்பட விழாவில் கலந்து கொள்ளலாம் என்று டாக்டர்கள் அனுமதி கொடுத்ததனால், திரைப்பட விழாவில் கலந்து கொண்டாராம் ஐஸ்வர்யா. இப்போது அவருக்கு ஆப்ரேஷன் செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து பிசியோதெரபி செய்ய வேண்டும் என்றும் தகவல்கள் வந்துள்ளன.மேலும் ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராயின் புதிய படம் குறித்து எந்த ஒரு தகவல்களும் வராத நிலையில், இரண்டு மாத ஓய்வுக்கு பிறகு தான் அடுத்த பட வேலையை தொடங்குவார் என்று கூறப்படுகிறது

Advertisement