மம்முட்டியின் ஆக்ஷன் படம் எப்படி இருக்கு? TURBO -முழு விமர்சனம் இதோ

0
288
- Advertisement -

மலையாள சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது நடிகர் மம்முட்டி தான். இவர் தன்னுடைய நடிப்புத் திறனுக்காக தேசிய விருது மட்டும் நான்கு தடவை வாங்கியுள்ளார். தற்போது இவர் மலையாளத்தில் வைஸாக் இயக்கத்தில் ‘Turbo’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். நடிகர் மம்மூட்டியே தயாரித்திருக்கும் இப்படத்தில் கிரிஸ்டோ சேவியர் இசை அமைத்திருக்கிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைகளம்:

கேரளாவில் அடிதடி சண்டை என கோபக்கார நபராக தனது அம்மாவுடன் வசித்து வருபவர் மம்முட்டி. சண்டை என்று வந்து விட்டால் இறங்கி அடிக்கும் இவர்,தனது அம்மாவுக்கு மட்டும் பயந்த பிள்ளையாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் தனது நண்பர் ஜெர்ரியின் காதலை சேர்த்து வைப்பதற்காக இந்துலேகாவை கடத்தி வரும் மம்முட்டி, அவருடனே சென்னைக்கு செல்லும் சூழல் ஏற்படுகிறது.

- Advertisement -

மறுபுறம் சென்னையில் செல்வாக்கான நபராக வளம் வரும் வெற்றிவேல் சண்முக சுந்தரம்(ராஜ் பி. ஷெட்டி), எம்.எல்.ஏ க்களை விலைக்கு வாங்கி தனது ஆதரவு கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று முயற்சிக்கிறார். அதற்காக அவர் செய்யும் மோசடி மம்மூட்டியின் நண்பரான ஜெர்ரிக்கு தெரிய வருகிறது. இந்த சூழ்நிலையில் தனது நண்பருக்காக வெற்றிவேலுடன் மம்மூட்டி மோதும் சூழல் உருவாகி, இறுதியில் எப்படி அவரை வீழ்த்தினார் என்பதை மீதிக்கதை.

மலையாளத்தில் போக்கிரிராஜா, புலிமுருகன் போன்ற படங்களை இயக்கிய வைஸாக் இப்படத்தை இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க கமர்சியல் படமாகவே உருவாகியுள்ள இப்படத்தில் சண்டைக் காட்சிகளுக்கு குறைவில்லை. மேலும் மம்முட்டிக்கு 72 வயது ஆகிறது என்று, அவரே சொன்னால் தான் தெரியும் அளவிற்கு துடிப்புடன் ‘டர்போ ஜோஸ்’ என்ற கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் சூழலே கதை பின்னணியாக இருக்கும் இப்படத்தில், வில்லனாக ராஜ் பி.ஷெட்டி தனது வாய்ஸ் மற்றும் பாடிலேங்குவெஜால் மிரட்டி இருக்கிறார். மேலும் தெலுங்கு நடிகர் சுனில் காமெடி சிறப்பாக செய்திருக்கிறார்.

முழுமையான கமர்சியல் படம் என்பதால் லாஜிக்குக்கு இடமில்லை. எனினும் மம்முட்டிக்கு நடிப்பதற்கான காட்சிகள் இல்லாவிட்டாலும் சண்டைக் காட்சிகளில் அடித்து நொறுக்கியுள்ளார். ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தை விறுவிறுப்பாக கொண்டு போன இயக்குனர், கிளைமேக்ஸில் இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுக்கும் வகையில் தமிழ் நடிகரின் வாய்ஸ் வைத்திருப்பது ஆச்சரியம்.

நிறை:

தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் சூழலை இயக்குனர் காண்பித்திருக்கிறார்.

மம்முட்டியின் ஆக்சன் காட்சிகள் நன்றாக இருக்கிறது.

விறுவிறுப்பான திரைக்கதை.

ஒளிப்பதிவு, இசை எல்லாம் ஓகே

குறை :

படத்தில் லாஜிக் இல்லை

இயக்குனர் வழக்கமான கதையை படமாக எடுத்துள்ளார்

படத்தில் வரும் காட்சிகள் யூகிக்கக்கூடியதாக இருந்தன.

மொத்தத்தில் TURBO – சுமார்

Advertisement