தன்னை வெட்டி சாய்த்தவரின் இறப்பிற்கு கதறி அழுதுள்ள Gp முத்து – இப்படி ஒரு பிரச்சனையா ? அவரே சொன்ன வீடியோ.

0
356
- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் பிரம்மாண்டமாக தொடங்கி இரண்டாம் வாரத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த நோக்கி ஜிபி முத்து, அசீம், அசல்கோலார், ராபர்ட், ஷெரினா, அசீம், ராமசாமி, ஆர்யன் தினேஷ் என்ற ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி , விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி என பல பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த முறையும் பலர் புது முகங்களாக இருக்கின்றனர்.

-விளம்பரம்-

பொதுவாகவே நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்கள் கழித்து தான் போட்டியாளர்களுக்கு ஆர்மி துவங்கம். ஆனால், இந்த முறை நிகழ்ச்சி தொடங்கிய முதல் இரண்டு நாட்களிலேயே போட்டியாளர்களுக்கு தொடங்கி துவங்கும். ஆனால், இந்த நிகழ்ச்சி துவங்கும் முன்பே ஆர்மி துவங்கப்பட்டது என்றால் அது ஜி பி முத்துவிற்கு தான். இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிகமான ரசிகர்களை கொண்டவர் ஜி பி முத்து தான்.

- Advertisement -

யூடுயூப் வைரல் நபர் :

”டிக்டாக் நண்பர்களே” என்ற வார்த்தையை கேட்டதும் டிக் டாக் ரசிகர்களுக்கும் நினைவிற்கு வருவது இந்த ஜி பி முத்து தான். இவரது ஜி பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று டிக்டாக்கில் ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. டிக் டாக் தடை செய்யப்பட்டதும் டிக் டாக் வாசிகள் பலரும் யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று இடம் பெயர்ந்து விட்டனர். அந்த வகையில் ஜி பி மமுத்துவும் இன்ஸ்டாகிராமில் மற்றும் யூடுயூபில் வீடியோக்களை பதிவிட்டுபிரபலமானார்.

தபால் சேவையை மீடுடெடுத்த மீட்பாளர் :

அதிலும் இவரது யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோ அனைத்தும் பெரும் வைரலானதுஇவரது யூடுயூப் சேனலை 3லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து சேனலை ‘ஸ்டூடியோ கிடையாது , கவர்ச்சியான புகைப்படம் கிடையாது, எடிட் கிடையாது , வித விதமான துணி கிடையாது, பார்வையாளர்களை சப்ஸ்கிரைப் செய்ய சொல்வது கிடையாது இருப்பினும் வேகமாக வளரும் யூடுயூப் சேனல். தபால் சேவையை மீடுடெடுத்த மீட்பாளர் ஜி பி முத்து தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

-விளம்பரம்-

தற்கொலை முயற்சி :

யூடுயூபில் இவர் வளர்ந்து வந்துகொண்டு இருக்கும் போதே குறிப்பிட்ட சமூகத்தை கிண்டல் செய்து, வீடியோ வெளியிட்டதாக போலீஸ் விசாரணை வரை சென்று பின்னர், போலீஸ் விடுக்கப்பட்டதுடன் வீடு திரும்பினார். மேலும், இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அதில் இருந்தும் மீண்டு வந்தார். பின்னர் தற்போது சோசியல் மீடியாவில் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவிற்கு தன்னுடைய காமெடியான பேச்சினாலும், உடல் மொழியினாலும் பிக் பாஸ் வரை சென்று ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அண்ணன் தம்பி சண்டை :

இந்நிலையில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்த ஜி.பி.முத்து எனக்கும் என்னுடைய தம்பிக்கும் எப்படி சண்டையில் எப்படி தழும்புகள் வந்தது எனக் கூறியிருந்தார். நான் தங்க பட்டறையில் வேலை செய்யும் போது நான் நல்ல வேலை செய்வதின்னல் நல்ல வருமானம் கிடைத்தது. அதேநேரத்தில் என்னுடைய குணம் வேறு என்னுடைய தம்பியுடைய குணம் வேறு. இதனால் பல சண்டைகள் நடக்கும் அப்படி ஒரு சண்டையில் தான் என்னை தடுத்து நிறுத்துவதற்காக என்னுடைய அம்மா மற்றும் தங்கை என்னை பிடித்துக் கொண்டனர்.

மொத்தம் 175 தையல் :

இதனால் என் தம்பி சண்டை போடும் போது கையிலிருந்த பிளேடின் மூலம் உடல் முழுவதும் வெட்டிவிட்டான். பின்னர் என்ன பிசு பிசுவென்று இருக்கிறது என்று பார்த்தால் உடல் முழுவதும் அவ்வளவு ரத்தம். இதற்கு பின்னர் என்னுடைய நண்பர் ஒருவர் தான் என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மொத்தமாக எனக்கு 175 தையல் போடப்பட்டது இருந்தாலும் அதிலிருந்து நான் மீண்டு வந்துவிட்டேன். தற்போது என்னுடைய தம்பியும் இறந்து விட்டார் இந்த காயங்களினால் துடித்ததை விட தம்பி இறந்தவுடன் என்னால் தாங்க முடியவில்லை. பின்னர் அவருடைய குழந்தைகளும் நான் தான் பார்த்து கொண்டு வருகிறேன் என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார் ஜி பி முத்து.

Advertisement