படத்தின் பட்ஜெட்டை விட 5 கோடிக்கு குறைவாக Netflix-ல் விற்கப்பட்ட ஜகமே தந்திரம் – அப்போ நஷ்டம்னு சொல்றீங்களா ? அதான் இல்ல.

0
1001
jagame
- Advertisement -

தமிழ் சினிமாவின் நடிப்பு அசுரன் என்ற பெயருடன் திகழ்ந்து வரும் தனுஷ்ஷின் ஜகமே தந்திரம் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான பட்டாஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இந்த படங்களை தொடர்ந்து நடிகர் தணுஷ், ஹாலிவுட்டில் கிரே மேன், தமிழில் கர்ணன், கார்த்திக் நரேனுடன் ஒரு படம், செல்வாகிரகவானுடன் ‘ஆயிரத்தில் ஒருவன் 2′, இந்தியில் ஒரு படம் என்று அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இதில் தனுஷ் நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் முக்கியமானப் படம் `ஜகமே தந்திரம்’. ரசிகர்கள் மத்தியில் இந்தப்படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

-விளம்பரம்-

2016 ஆம் ஆண்டு துவங்கிய இந்த படத்தின் பணிகள் எப்போதோ நிறைவடைந்து கடந்த ஆண்டு மே 1-ம் தேதியே ரிலீஸுக்கு நாள் குறிக்கப்பட்ட இப்படம் கொரோனா லாக்டெளன் காரணமாக அப்படியே நிறுத்தப்பட்டது. தமிழில் பீட்சா ஜிகர்தண்டா, பேட்ட போன்ற வெற்றி படங்களை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.  தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.

இதையும் பாருங்க : ஜகமே தந்திரம் டீஸர்ல பாபா பாஸ்கர நோட் பன்னீங்களா ? வேற லெவல்ல குத்து இருக்கும் போல இந்த பாட்ல.

- Advertisement -

பிப்ரவரி 12-ம் தேதி தியேட்டர் ரிலீஸ் என முதலில் முடிவெடுத்து தயாரிப்புத் தரப்பு தனுஷுக்கு தகவல் சொன்னது. ஆனால், இடையில் நேரடி ஓடிடி ரிலீஸுக்காக நெட்ஃபிளிக்ஸில் பேச்சுவார்த்தைகள் நடக்க அதிருப்பதியானார் நடிகர் தனுஷ். மேலும், `தியேட்டர் ரிலீஸைத்தான் விரும்புகிறேன்” என நடிகர் தனுஷ் ட்வீட்போட இந்த படத்தில் திரையரங்கில் வெளியிட பல்வேறு முயற்சிகள் நடந்தது. ஆனாலும் இந்த படத்தை Netflix நிறுவனம் கைப்பற்றியது.

சமீபத்தில் வெளியான தகவலின்படி இந்த திரைப்படத்தை 55 கோடி கொடுத்து நெட்ஃபிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் பட்ஜெட் 60 கோடி என்று கூறப்பட்டது. அப்படியானால் இந்த திரைப்படம் 5 கோடி நஷ்டத்தில் விற்கப்பட்டதா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி 15 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறது. எனவே இந்த திரைப்படம் மொத்தமாக 70 கோடி ரூபாய் வியாபாரம் செய்து இருக்கிறது. மேலும், இந்த படத்தின் ரீமேக் உரிமை மூலமாகவும் சில கோடிகளை வசூலிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement