வீட்டில் இருந்தபடியே கலர் வாக்காளர் அட்டையை எப்படி பெறுவது ? இத பண்ணுங்க போதும்.

0
3330
voter
- Advertisement -

வீட்டிலிருந்தபடியே வண்ண வாக்காளர் அடையாள அட்டையை எப்படி வாங்கலாம் என்பதைப் பற்றி தான் நாம் இங்கு பார்க்க போகிறோம். இந்தியாவில் குடிமகனின் அடையாளச் சான்றுக்கான முக்கிய ஆவணங்களில் ஒன்று தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை. தேர்தலில் ஓட்டு போடுவதற்கு அவசியமான சான்றுகளில் ஒன்று தான் வாக்காளர் அடையாள அட்டை. இந்த அட்டை தேர்தலுக்கு மட்டுமில்லாமல் இந்தியாவின் குடியுரிமை அடையாளமாகவும் திகழ்கிறது. இந்த அட்டை மூலம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். இந்தியாவில் ஒருவர் வசிக்கிறார். அவருக்கு 18 வயது அல்லது அதற்கும் மேல் பூர்த்தி ஆகி விட்டதாக இருந்தால் எளிதாக வாக்காளர் அடையாள அட்டையை வாங்க விண்ணப்பிக்கலாம்.

-விளம்பரம்-

வாக்காளர் அட்டையை எவ்வாறு விண்ணப்பிப்பது, எவ்வாறு பெறுவது, வண்ண வாக்காளர் அட்டை வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை? என்பதைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். ஆரம்ப காலத்தில் வாக்காளர் அடையாள அட்டையை வாங்குவதற்கு அலுவலகம் செல்ல வேண்டும். விண்ணப்பம் பூர்த்தி செய்ய வேண்டும். பின் அதற்கு தேவையான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று பல விதிமுறைகள் இருந்தது. அதனால் பல பேர் சிரமப்பட்டு வாக்காளர் அட்டையை வாங்காமல் இருந்தார்கள். ஆனால், இப்போது ஆன்லைன் மூலம் எளிதாக வாக்காளர் அடையாள அட்டையை பெறலாம்.

- Advertisement -

இதற்காக எந்த ஒரு அலுவலகத்திற்கும் செல்ல தேவை இல்லை. ஆன்லைனில் பதிவு செய்த உடனே வீடு தேடி வாக்காளர் அடையாள அட்டை வந்து விடும். அந்த அளவிற்கு இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டை பெறுவதில் பல எளிய முறைகளை கொண்டு வந்துள்ளது. இதற்காக மக்கள் யாரும் கஷ்டப்பட தேவையில்லை. அதிலும் வாக்காளர் அட்டையில் ஏதாவது திருத்தங்கள் இருந்தாலும் அதை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். இது பல பேருக்கு தெரியாத ஒன்றாக உள்ளது. அதனால் வாக்காளர் அட்டை விண்ணப்பிப்பதும், அதை பெறுவதும் மிக கடினம் என்று பல பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதுதான் உண்மை இல்லை.

இந்திய தேர்தல் ஆணையம் தற்போது புதிய மற்றும் புதுமையான வடிவமைப்புடன் வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை வெளியிட்டிருக்கிறது. மேலும், வாக்காளர் அடையாள அட்டைகளில் விபரங்களில் மாற்றம் அல்லது திருத்தங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் மற்றும் அடையாளங்களுக்காக பதிவு செய்தவர்கள் இப்போதெல்லாம் வண்ண அடையாள அட்டைகளை தான் பெறுவார்கள். ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் புதிய பிளாஸ்டிக் மிருதுவான வண்ண வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வெறும் 30 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும். இதற்கு ஒன்றும் பெரிய அளவில் எல்லாம் செலவாகாது. இந்த புதிய வண்ண வாக்காளர் அட்டையில் இந்தியாவின் முக்கோண கொடியும், அட்டையில் விண்ணப்பத்தாரரின் வண்ண புகைப்படமும் உள்ளது.

-விளம்பரம்-

அட்டையின் அம்சங்களிலும் அல்லது வாக்காளர் அடையாள அட்டையில் கொடுக்கப்பட்ட விவரங்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்த வண்ண வாக்காளர் அடையாள அட்டை வாங்க NSVP யின் வலையத்திற்கு செல்ல வேண்டும். இது தவிர ஒரு புதிய வாக்காளரின் பதிவுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின் தேவையான விவரங்களை இங்கே நிரப்பவேண்டும். ஒட்டுமொத்தமாக இங்கே கொடுக்கப்பட்ட படிவத்தை நிரப்ப வேண்டும். ஆன்லைன் மூலம் படிவத்தை நிரப்பி உடன் சுமார் 40 லிருந்து 60 நாட்கள் காத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு இந்த வண்ண வாக்காளர் அடையாள அட்டை உங்கள் வீட்டிற்கே வந்து விடும்.

மேலும், புதிய வாக்காளர் அடையாள அட்டையை வாங்குவதற்கு சில ஆவணங்கள் தேவை. அவை வயது சான்றிதழ், விண்ணப்பதாரரின் தற்போதைய புகைப்படம், பிறப்புச் சான்று, முகவரி சான்று இவை இருந்தால் போதும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும், ஏற்கனவே வாக்காளர் அடையாள வைத்திருப்பவர்கள் http://www.elections.tn.gov.in/eroll/ இந்த தளத்திற்கு சென்று உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். அதோடு வாக்காளர் அடையாள அட்டை குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் www.elections.tn.gov.in/ இந்த தளத்திற்கு சென்று பார்க்கலாம்.

Advertisement