உங்கள் password-ஐ இனி கூகுளால் கூட கண்டுபிடிக்க முடியாது.! இதை மட்டும் நீங்கள் பண்ணால் போதும்.!

0
1364
Google-password
- Advertisement -

தற்போதுள்ள மிகப்பெரிய வசதியும் பிரச்சனையும் இணையத்தளம் தான். இது இல்லாமல் நாம் இன்று ஒன்றும் செய்ய முடியாது. தற்போதுள்ள டிஜிட்டல் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. அதில் அதை கண்டிப்பாக google கணக்கு இல்லாமல் நீங்கள் முழுமையாக பயன்படுத்த முடியாது அல்லவா.

-விளம்பரம்-

அப்படி பயன்படுத்தும் நம் கூகுள் கணக்கின் password தெரிந்தால் போதும் நமது போனை சுலமபமாக ஹேக் செய்ய முடியும். அப்படிபட்ட கூகுள் கணக்கை நாம் எவ்வாறு பாதுகாப்பது. பெரும்பாலும் நாம் மொபைல் போனை விட நாம் கணனியை பயன்படுத்துவதன் மூலம் கூகுள் கணக்கின் Password-ஐ பாதுகாப்பானதாக மாற்ற முடியும்.

- Advertisement -

அதற்காக தான் ‘Password Checkup’ என்னும் புதிய Chrome extension ஒன்றை வெளியிட்டுள்ளது கூகுள். இந்த Chrome extension மூலம் நீங்கள் டைப் செய்யும் பாஸ்வேர்டு பாதுகாப்பானதா என்பதைக் கண்டறியமுடியும். ஏற்கெனவே பாஸ்வேர்டு ஏதேனும் டேட்டா லீக்கில் பறிபோகியுள்ளதா போன்ற விஷயங்களை இது கண்காணிக்கும். இப்படிச் செய்வதன் மூலம் முடிந்தவரை ஆன்லைன் கணக்குகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கமுடியும் என நம்புகிறது.

கூகுள் அறிக்கையின்படி, ஒரு மூன்றாம் தரப்பு டேட்டா லீக்கினால் பாஸ்வேர்டு பறிபோனது தெரியவந்தால் உடனடியாக இது கண்டறியும். அதுவும் அது கூகுள் கணக்காக இருந்தால் தானாகவே அதை மாற்றவும் செய்கிறது. அந்த கூகுள் கணக்குக்கு எந்த ஒரு பாதுகாப்பு பிரச்னையும் வாராமலும் இது பார்த்துக்கொள்ளுமாம்.

-விளம்பரம்-

ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள 400 கோடி கணக்குகளில் நீங்கள் டைப் செய்யும் username அல்லது பாஸ்வேர்ட் இருக்கிறதா என்று ஒப்பிடும் இந்த extension. அப்படி இருப்பதைக் கண்டறிந்தால் உடனடியாக பாஸ்வேர்டை மாற்றுமாறு உங்களுக்கு எச்சரிக்கையைத் தரும். இப்படி செக் செய்யும்போது கூகுளால் கூட இந்த பாஸ்வர்ட்டை பார்க்கமுடியாத அளவில் encryption செய்யப்பட்டிருக்குமாம்.

இது Chrome பிரவுசரில் மட்டும்தான் இயங்கும். அதில் மேலே இருக்கும் வசதிகளில்  ‘More tools’ சென்று ‘Extensions’ கிளிக் செய்து ‘Password Checkup’ என்று தேடினால் இந்த extension-ஐ கண்டுபிடிக்கலாம். அதை ‘Add to Chrome’ என்று கொடுத்துவிட்டால் போதும். இனி நீங்கள் லாகின் செய்யும்போதெல்லாம் உங்கள் பாஸ்வேர்டை  பாதுகாப்பானதாக இருக்கிறதா என்று செக் செய்து சொல்லும் இந்த extension. இது முதல் வெர்ஷன்தான் இன்னும் புதிய வசதிகள் சேர்க்கப்பட்டு மேலும் மேம்படும் இது என கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளத

Advertisement