நான் இன்னும் மோசமாக மாறக்கூடியவள்- பிக் பாஸ் காயத்ரி ட்வீட், யாருக்கு இந்த ட்வீட்?

0
1275
Gayathri Raghuram

டான்ஸ் கோரியோகிராபராக பலரால் அறியப்படுவபர் காயத்ரி ரகுராம். அதன் பிறகு பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு ஆரம்பம் முதலே சர்ச்சைகளில் சிக்கி புகழ் பெற்றவர் காயத்ரி ரகுராம்.
Gayathri Raghuram
பிக் பாஸ் வீட்டினில் இருக்கும் போதே தான் நினைத்ததை செய்து மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர். நிகழ்ச்சியின் முடிவிற்குப்பின்னும் நிறைய ட்வீட் செய்து பலரை மறைமுகமாக தாக்கி வந்தார். இதனால் மக்களும் பலவாரு அவரது ட்வீட்டுகளில் சென்று அவருக்கு ரிப்ளை செய்து வந்தனர்.
Gayathri Raguramm
தற்போது அதே போல் ஒரு ட்வீட் செய்துள்ளார்.அதாவது, என்னை மோசமாக நினைக்கக் கூடியவர்களுக்கு நான் இன்னும் மோசமாக மாறக்கூடியவள். எனக்கு என்ன கொடுக்கிறீர்களோ அதை தான் நான் கொடுப்பேன்.
Gayathri Raghuram
மேலும், விளையாட்டாக் சொல்கிறேன். சீரியசாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.என ட்வீட் செய்துள்ளார். ஆனால், இது யாருக்கு பதிலடியாக கொடுத்துள்ளார் எனத் தெரியவில்லை என ட்விட்டர் வட்டாரங்கள் பேசி வருகின்றன.

Advertisement