விஜய் கையில் இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் தெரியுமா ? இப்போ இந்த சீரியல்ல ஹீரோயினா நடிக்கிறாங்க.

0
4741

பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பவர் தளபதி விஜய். தளபதி விஜய்க்கு தமிழகம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். இவருடைய படம் திரையரங்குகளில் வரப்போகிறது என்று சொன்னாலே போதும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் உலக அளவில் வசூல் சாதனை செய்தது. இந்நிலையில் தளபதி விஜய்யின் புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் தளபதி விஜயின் கையில் ஒரு குழந்தை உள்ளது. அந்த குழந்தை தற்போது நடிகை ஆவர். அந்த நடிகை யார் தெரியுமா? அவர் வேற யாரும் இல்லைங்க சீரியல் நடிகை ஹிமா பிந்து. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த தொடர் தான் இதயத்தை திருடாதே. இந்த தொடரில் புதுமுக நடிகையாக சஹானா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் ஹிமா பிந்து.

இதையும் பாருங்க : என்ன எந்த படத்துலயும் நடிக்க விடமாட்றாங்க – எனக்கு நீங்க உதவி செய்ங்க. வீடியோ வெளியிட்ட கார்த்தி.

- Advertisement -

இவருக்கு ஜோடியாக சிவா என்ற கதாபாத்திரத்தில் நவீன்குமார் நடிக்கின்றார். இந்த தொடர் ர் கலர்ஸ் மராத்தி தொடரான ஜிவ் ஜலா ஏடே பிசா என்ற தொடரின் தழுவல். இந்த தொடர் அரசியல் ரீதியாக போட்டி போடும் இரு அரசியல்வாதிகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட சிவா மற்றும் சஹானா இருவரின் காதல் கதை. இந்த தொடர் ஒளிபரப்பான சில மாதத்திலேயே கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Idhayathai Thirudathe Colors Tamil Serial Launching on Valentines Day at  7.30 P.M

மேலும், இந்த தொடர் ஒளிபரப்பான சில நாள்களிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இந்த தொடரில் நடிக்கும் நடிகை தான் விஜய்யின் கையில் இருக்கும் குழந்தை. இது நடிகை ஹிமா பிந்து சிறுவயதில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம். தற்போது இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement