“அமைச்சர் மூர்த்தி அதை செய்திருந்தால் 20 ஆயிரம் பெருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும்” – குற்றச்சாட்டிய அண்ணாமலை.

0
1252
- Advertisement -

“தமிழகத்தில் பத்திரப் பதிவு மற்றும் வணிகவரித் துறையில் விஞ்ஞான ரீதியாக ஊழல் நடைபெற்று வருகிறது” என்று மதுரை பாதயாத்திரையில்  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அமைச்சர் மூர்த்தி மீது குற்றம்சாட்டினார். ஜூலை 27 அன்று தொடங்கபட்ட பாதயாத்திரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற உள்ளது. அதில் இன்று 2-வது நாளாக இன்று யாத்திரை நடத்தினர். காலையில் நரசிங்கம் கோயிலில் இருந்து ஒத்தக்கடை வரை பாத யாத்திரை நடத்தினார்.

-விளம்பரம்-

பாதயாத்திரை:

தற்போது தமிழக பிஜேபியின் மாநில தலைவர் தமிழகத்தில் “என் மண் என் மக்கள்” என்ற தலைப்பில் பாதயாத்திரையை நடத்தி .வருகிறது. இந்த பாதயாத்திரையானது ஜூலை 27 அன்று ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இது இந்த மண்ணோடும் மக்களோடும் இதயத்தோடு இதயமாக நின்று உறவாடும் ஒரு நடை பயணம். என் மண், என் மக்கள் என்று அமித்ஷா  குறிப்பிட்டிருந்தார் .6 மாதங்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரையில் அண்ணாமலை 225ஊர்களில் மக்களை சந்திக்க உள்ளார்.

- Advertisement -

மேலும் இதில் தொடக்க நாளில் கலந்து கொண்டு பாதயாத்திரை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி வைத்துள்ளனர் என்றும், திமுக காங்கிரஸ் ஒட்டு கேட்டு வந்தால் அவர்களுக்கு 2ஜி ஊழல் நிலக்கரி பற்றி தான் அவர்களுக்கு நியாபகம் வர வேண்டும் என்று கூறி அவர் பாதயாத்திரை தொடங்கி வைத்தார்.

அமைச்சர் மூர்த்தி பற்றி அண்ணாமலை கூறியது:

“அமைச்சர் மூர்த்தி செய்யாத தவறே இல்லை, தமிழகத்தில் நடைபெறும் தவறுகளுக்கு மதுரை கிழக்கு தொகுதியில் நடைபெறும் ஊழலே காரணம்” என்றும் அவர் கூறினார், அமைச்சர் மூர்த்தி பத்திர பதிவு மற்றும் வணிக துறையில் பணியிடை நீக்கம், பணியிடை நீக்கத்தை ரத்து செய்யவும், இடம் மாறுதல் மற்றும் இடம் மாறுதலை ரத்து செய்யவும் லஞ்சம் பெறப்படுகிறது என்றும் அண்ணாமலை கூறினார். பத்திரப்பதிவு மற்றும் வணிக துறையில் விஞ்ஞன ஊழல் நடைபெற்று வருகிறது என்றும், அலங்காநல்லூரில் உள்ள சர்க்கரை ஆலை இரண்டு ஆண்டுகளாக மூடபட்டுள்ளது,

-விளம்பரம்-

அமைச்சர் மூர்த்தி தன் மகளுக்கு செய்த செலவில் சில கோடிகளை மட்டும் அளித்து இருந்தால் ஆலையை மீண்டும் செயல் படுத்தியிருக்கலாம் அதில் மறைமுகமாக 20 ஆயிரம் பெருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து இருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும் கூறுகையில் மதுரையில் அமையுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையால் தென் இந்திய முழுவதும் பயனடையும் என்றும், அதற்காக மத்திய அரசு ரூபாய்  2600 கோடியை வழங்கியுள்ளத என்றும் ஏப்ரல் 2026 ஆண்டுக்குள் மருத்துவமனை முழுவதும் கட்டி முடிக்கப் படும் என்று கூறினார்.                          

Advertisement