திமுக மட்டும் அது போல் செய்தால் நான் தேர்தலில் இருந்து விலகி கொள்கிறேன் மற்றும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்குறேன் – சீமான்.

0
386
- Advertisement -

கரூரில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கரூர் வந்தார். அப்போது கரூரில் உள்ள தனியார் விடுதியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் நான் திமுகவிற்கு ஆதரவு தர தயாராக இருக்கிறேன். 40 இடங்களிலும் போட்டியிடவிலை ஆனால் திமுக அதற்க்கு சில விஷயங்களை செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

சீமான் கூறியது:

“எனக்கு தண்ணீர் தர மறுப்பான் எனது கட்ச தீவை எடுத்துக் கொடுப்பான். என் இனமே ஈனத்தில் சாகும்போது அவர்களை கொன்று குவிப்பான். நீ அவனை கூடவே வைத்துக்கொண்டு கூட்டணி கூட்டணி என்று சொன்னால் நாங்கள் மானங்கெட்டு போய் உங்களுக்கு ஓட்டு போட்டு வெல்ல வைக்க வேண்டும். இது பற்றி கேட்டால் சீமான் ஆவேசப்படுகிறார் கோவப்பட்டு பேசுகிறார் என்று கூறுகிறீர்கள். நான் உண்மையிலே சொல்லுகிறேன் இந்த நிலைமையில் அம்மா ஜெயலலிதா இருந்திருந்தால் கர்நாடக தண்ணீர் தர மறுத்திருந்தால் அவர்களை கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி இருக்கும். அதில் அந்த அம்மா சிறந்தவர். நீங்களும் அதுபோல் உங்கள் மாநில மக்களின் நலனுக்காக நில்லுங்கள்.” என்றும் கூறினார்.

- Advertisement -

காங்கிரஸ் கட்சியை பற்றி கூறியது:

“காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து வீசுங்கள். திமுக எவ்வாறு செய்தால் நான்  போட்டியிடவில்லை விலகிக் கொள்கிறேன் நான் உங்களிடம் கூட்டணியில் வந்து உங்களிடம் சீட்டுக்கள் எல்லாம் கேட்கவில்லை. நான் திமுகவை ஆதரித்து வருகிறேன் உங்களுக்காக வாக்கு கேட்கும் நாங்களும் என் கட்சியை நகரம் சேர்ந்து உங்களுக்காக ஊர் முழுவதும் சென்று வாக்குகளை கேட்கிறோம். அதேபோல் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்யுங்கள்.

நான் உங்களை ஆதரிக்கிறேன். 40 தொகுதிகளிலும் நான் போட்டியிட மாட்டேன். தேர்தலுக்காக தான் நான் இப்போது வேலை செய்து கொண்டிருக்கிறேன். அவர்கள் அது நான் கூறியது போல் செய்தால் நான் விலகிக் கொள்கிறேன். நான் எனது தம்பிகள் பார்த்துக் கொள்கிறேன். எங்களுக்கு நாடும் நாட்டு மக்களின் நலம் தான் முக்கியம் என்று அவர்களும் வந்து விடுவார்கள்.”என்றும் கூறினார்.

-விளம்பரம்-

இஸ்லாமிய சிறை வாசிகள் பற்றி கூறியது:

“இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்யுங்கள் என்று சொன்னால் நாங்கள் அவர்களை பாதுகாக்கிறோம் இன்று கூறுகிறீர்கள் எப்படி 30 வருடங்களாக சிறையில் வைத்து அவர்களை பாதுகாத்துக் கொள்கிறீர்களா. திமுக அரசை பற்றி எது கேட்டாலும் அவர் சங்கி. திமுகவை எதிர்த்தாலும் சங்கு என்று கூறுகிறார்கள். மீனவர்களின் கூட்டத்தில் ராமேஸ்வரத்தில் சென்று பேசுகிறார் கட்சி தீவுக்கு நாங்கள் பொறுப்பல்ல அது அதிமுக தான் துரோகம் செய்தது என்று கூறுகிறார் ஸ்டாலின்.

ஐந்தாயிரம் ஏக்கரில் ஏர்போர்ட் கட்ட துடிக்கும் 5 ஆயிரம் ஏக்கரில் ஏரியை வெட்டக்கூடாது. எந்த இடத்திலும் ஏர்போர்ட் கட்ட முடியும் ஆனால் எந்த எல்லா இடத்துங்களிலும் விவசாயம் செய்ய முடியாது. மண்ணை மக்களே நேசிப்பவர் இதையெல்லாம் யோசிக்க வேண்டும்.”என்றும் கூறினார்.

Advertisement