வாடகை கூட வேண்டாம் வெளியேறுங்க. இடிக்கப்பட்டதா இளையராஜாவின் இசைக்கோவில்.

0
8932
illayaraja
- Advertisement -

சினிமா திரையுலகில் இசைஞானி இளையராஜாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சின்ன குழந்தையை கேட்டால் கூட சொல்லிவிடும் அந்த அளவிற்கு இசையில் சிறந்து விளங்கியவர். இவர் இசைத்துறையில் பண்ணாத சாதனைகளே இல்லை. மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். சமீபத்தில் கலை பயணத்தை பாராட்டி பிரம்மாண்ட விழா ஒன்று கூட நடத்தப்பட்டது. அதே போல இளையராஜா கடந்த சில காலமாகவே பல்வேறு சர்ச்சைகளில், சிக்கல்களில் சிக்கி வருகிறார். இந்த நிலையில் இசைத்துறையின் ஜாம்பவானாக விளங்கிய இளையராஜாவின் இசை கோவிலை இடித்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் ரசிகர்கள் எல்லாம் அதிர்ச்சியில் அதிர்ந்து போய் உள்ளார்கள். இதுகுறித்து பார்க்கையில்… 80,90 காலங்களில் இருந்தே இளையராஜாவின் இசைக்கு வசப்படாத இதயங்கள் உள்ளதா!! என்று கூறுமளவிற்கு புகழின் உச்சத்தில் இருந்தவர்.

-விளம்பரம்-
Image result for ilayaraja in prasad studio"

- Advertisement -

இந்நிலையில் இளையராஜா அவர்கள் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் தான் 41 ஆண்டுகளாக தன்னுடைய இசை பயணத்தை நடத்தி வருகிறார். மேலும், ரஜினிகாந்த்,கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, விஜய் என்று சினிமா துறையில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படத்திற்கு இசை அமைத்தவர். அதுமட்டும் இல்லாமல் இவருடைய பாடல்கள் எல்லாம் தற்போது உள்ள இளைஞர்கள் மனதையும் கவர்ந்த பாடல்கள் ஆகும். இப்படி புகழ் பெற்ற பாடல்களை உருவாக்கிய இசை கோவில் “பிரசாத் ஸ்டூடியோ”. மேலும், இளையராஜா அவர்கள் தினமும் காலை 7 மணிக்கு பிரசாத் ஸ்டுடியோவுக்கு செல்லுவார். ஆனால், இரவு எப்போ வீட்டிற்கு செல்வார் என்று யாருக்கும் தெரியாது. அது மட்டுமில்லாமல் வீடு, மனைவி, மகன்கள், மகள், பேரக்குழந்தைகள் எல்லாரையும் மறந்து அதிக நேரம் இவர் செலவழிப்பது பிரசாத் ஸ்டூடியோவில் தான்.

இதையும் பாருங்க : குஷி படத்தின் கதையை விஜய்யிடம் சொல்லிவிட்டு எஸ் ஜே சூர்யா பார்த்த வேலை. வெளியான ரகசியம்.

இதனைத்தொடர்ந்து ஒரு முறை எல்.வி.பிரசாத்தின் மகன் இளையராஜாவிடம் கூறியது, ‘இது எப்போதுமே உங்கள் இசை கோயில். நீங்கள் எங்கள் வளாகத்தில் இசையமைப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. மேலும், கடைசி வரை நீங்கள் இங்கே தான் இருக்க வேண்டும்’ என்று ஒரு விழா மேடையில் இருந்தார். ஆனால், என்ன நடந்தது என்றால் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் தற்போது எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று தெரிகின்றது. மேலும், இளையராஜாவின் ஸ்டூடியோவுக்கு வாடகை கொடுக்க வேண்டும் என்று சொன்னதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், திடீரென்று வாடகை எல்லாம் வேண்டாம் நீங்கள் எங்கள் இடத்தை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்லியிருக்கிறார். இளையராஜாவும் அவரிடம் பொறுமையாக சமாதானம் பேசினார்.

-விளம்பரம்-
prasad Studio

ஆனால், அதெல்லாம் பயனில்லாமல் போனது. பின் இரவோடு இரவாக இளையராஜாவின் ஸ்டூடியோவுக்குள் நுழைந்து, தங்களின் பொருள்களை வைத்துவிட்டது பிரசாத் நிர்வாகம் என்று மாற்றிவிட்டார். இந்நிலையில் தான் இளையராஜா அவர்களுக்கு பெங்களூரில் ஒரு இசைக் கச்சேரி, கமல் 60 விழாவில் ஒரு இசைக் கச்சேரி என்ற இரண்டு பெரிய இசைக் கச்சேரிகளை நடத்த வேண்டிய சூழ்நிலையில் இருந்தார். மேலும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் உயிருக்குயிராக இரவும் பகலும் என்று பாராது பாடுபட்ட இசை கோவில் கையை விட்டுப் போகிறது என்று மன உளைச்சலலில் இளையராஜா இருந்தார். இதுவரை எத்தனையோ சினிமா பிரபலங்கள் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்திடம் சமசரம் பேசி வசித்து வந்தார்கள். ஆனால், எந்த ஒரு முயற்சியும் பலன் அளிக்காமல் போனது.

Prasad Studio
Image result for ilayaraja in prasad studio"

மேலும், இந்த பிரச்சனையின் உச்சகட்டமாக கடந்த 25ஆம் தேதி இரவு பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து இளையராஜாவின் இசை கோவிலை இடித்து விட்டார்கள் என்று சிலர் சொல்கிறார்கள். மேலும், கடந்த இரண்டு நாட்களாக பயங்கர பாதுகாப்பு காவலுடன் பிரசாத் ஸ்டூடியோ உள்ளது. மேலும், உள்ளே யாரையும் விடாமல் தடுத்து விடுகிறார்கள். பாரதிராஜா, அமீர், சீமான் ஆகியோர் இளையராஜாவுக்கு ஆதரவாக பிரசாத் ஸ்டூடியோ வாசலில் போராட்டம் நடத்தி உள்ளார்கள். இது தொடர்பாக பிரசாத் குழுவின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியது, இளையராஜாவின் ரெக்கார்டிங் ஸ்டுடியோ இடிக்கப்படவில்லை. அப்படியே தான் பொய் சொல்லி வருகிறார்கள். மேலும் இந்த மாதிரி வதந்திகளை எல்லாம் பரப்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.

Advertisement