ஆமா, நான் எல்லோருக்கும் மேலானவன் தான் – ராயல்டி விவாகரத்தில் நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பு பதில். நீதிபதியின் உத்தரவு

0
95
- Advertisement -

தன்னுடைய பாடல்களை பயன்படுத்த கூடாது என்று இளையராஜா போடப்பட்ட வழக்குக்கு நீதிபதி போட்டிருக்கும் உத்தரவு தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 70 காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசைத்து கொண்டு இருக்கிறார். இவருடைய இசையை ரசிக்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-

அதோடு இவரது இசைக்காகவே ஓடிய படங்கள் பல உள்ளது. மேலும், இளையராஜாவின் பயோபிக் படம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டு தகவல் வெளியாகி இருந்தது. இதில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். காரணம், தனுஷின் முகம் இளையராஜாவின் முகம் போலவே இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் தனுஷ் இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் பயோபிக்கில் நடிக்க தனுஷ் சரியாக இருப்பார். இளையராஜா பயோபிக் படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தான் இயக்கப் போவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இளையராஜா குறித்த தகவல்:

சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை போடப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் இளையராஜா உடைய 4500 பாடல்களை எக்கோ அண்ட் அகி ஆகிய நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால், இந்த ஒப்பந்தம் 2014 ஆம் ஆண்டில் முடிந்துவிட்டது. ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தன்னுடைய பாடல்களை எக்கோ, அகி ஆகிய நிறுவனங்கள் பயன்படுத்துவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இளையராஜா தொடர்ந்த வழக்கு:

மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தயாரிப்பாளரிடம் உரிமை பெற்ற பிறகு இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை இருக்கிறது. இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீதும் தனிப்பட்ட தார்மீக சிறப்புரிமை இருக்கிறது என்று 2019 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இருந்தும் இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதி, நீதிமன்றம் உத்தரவின் மீது இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

எக்கோ-அகி நிறுவனம் தரப்பு வாதம்:

அதோடு இளையராஜா அளித்த புகார் மத்திய குற்றப்பிரிவு சார்பில் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது நீதிபதி, இந்த வழக்கு சிவில் பிரச்சனை. கிரிமினல் புகார் அளிக்க முடியாது என்றும் கூறியிருந்தார்கள். இந்த நிலையில் எக்கோ,அகி நிறுவனம், பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்கள். அதில் அவர்கள், படத்தின் காப்புரிமை தயாரிப்பாளர்களிடம் உள்ளது. இசையமைப்பாளர் பாடலுக்கு ஊதியம் பெற்ற பிறகு அனைத்து உரிமைகளையும் இழந்து விடுகிறார்.

இளையராஜா தரப்பு வாதம்:

காப்புரிமை சட்டத்தின் கீழ் பாடல்களின் உரிமையாளராக இளையராஜா வருவாரா? என்றால் கிடையாது. இளையராஜா ஒரு இசைஞானி என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால், 70, 80, 90களில் வந்த அவருடைய பாடல்கள் அனைத்தும் இப்போது கிடையாது. இளையராஜா தன்னை எல்லோருக்கும் மேலானவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் என்று கூறியிருக்கிறார்கள். இதற்கு இளையராஜா தரப்பில், ஆமாம்! நான் எல்லோருக்கும் மேலானவன் தான். இதனை சொல்வதாக நினைக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். இந்த வாதங்களை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை வரும் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.

Advertisement