இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் மகன் காலமாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் இசையின் ஜாம்பவனாக பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வருபவர் இளையராஜா. இவர் இசையின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து இருக்கிறார். அதோடு இவரின் இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை என்று சொல்லலாம். ஏன்னா, அந்த அளவிற்கு தன்னுடைய இசையால் எல்லோரையும் கட்டிபோட்டவர் இளையராஜா.
1976 ஆம் ஆண்டு இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார்.
இளையராஜா குடும்பம்:
மேலும், இவர் கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமை பெற்றவர். இதனால் இவர் பல விருதுகளை பெற்று இருக்கிறார். தற்போது இவர் படங்களில் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் இளையராஜா குடும்பத்தில் நிகழ்ந்து இருக்கும் சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இசைக்கவி இளையராஜா குடும்பத்தில் மொத்தம் நான்கு சகோதரர்கள். மூத்தவர் பாவலர் வரதராஜன். இவர் கம்யூனிஸ்ட்.
பாவலர் வரதராஜன் குறித்த தகவல்:
இவர் ஊர் ஊராக சென்று தனது பாடல்களின் வழியாக கம்யூனிஸ்ட் குறித்து பரப்பியவர். பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நாடக எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டு திகழ்ந்தவர். இவர் தேர்தல் பிரச்சாரம் செய்தவர். அவருக்கு எதிராக பாடிய பாடலின் வடிவம் தான் இளையராஜா இசையமைத்த ஒத்த ரூபாயும் தாரேன் பாடல். இரண்டாவது பாஸ்கர், மூன்றாவது இளையராஜா, நான்காவது கங்கை அமரன் ஆவார். இதில் மூத்த வரை தவிர மீதி மூன்று பேரும் சென்னை வந்து சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தார்கள்.
இவர்களை அனைவரும் பாவலர் சகோதரர்கள் என்று தான் அழைப்பார்கள். இந்த நான்கு பேரில் இப்போது இளையராஜாவும், கங்கை அமரனும் மட்டுமே இருக்கிறார்கள். மேலும், சினிமாவில் இளையராஜாவின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் வரதராஜன் தான் இவர் கடந்த 1973 ஆம் ஆண்டு உடல் நலக் குறைபாடு காரணமாக இறந்துவிட்டார். மேலும், இவருடைய மகன்களில் ஒருவர்தான் பாவலர் சிவன். இவர் இளையராஜாவின் இசைக் குழுவில் பயணத்தில் வருகிறார். இவர் கிட்டார் இசை கலைஞர். அது மட்டும் இல்லாமல் இவர் ஒரு சில படங்களிலும் இசையமைத்திருக்கிறார்.
பாவலர் சிவன் மறைவு:
மேலும், பாவலர் சிவன் புதுச்சேரியில் வசித்து வந்தார். பின் உடல்நிலை குறைவால் இன்று காலை பாவலர் சிவன் காலமாகி இருக்கிறார். இவருடைய மறைவு இளையராஜா குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பாவலர் சிவனுடைய மறைவிற்கு இசையமைப்பாளர், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இசையமைப்பாளர் தினாவும் இரங்கல் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.