சிவாஜி படத்தில், Tms பாடிய பாடலை நீக்கிவிட்டு Spbயை பாட வைத்த இளையராஜா. இது தான் காரணம்.

0
1974
Tms
- Advertisement -

சிவாஜி படத்தில் டி.எம்.சௌந்திரராஜன் பாடிய பாடலை நீக்கி இளையராஜா செய்த மாற்றம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 80ஸ் காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசைக்கு மயங்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதோடு இவரது இசைக்காகவே ஓடிய படங்கள் பல உள்ளது.

-விளம்பரம்-

இப்படி இவர் திரைத்துறையில் புகழ்பெற்றவராக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பேரிடம் வெறுப்பை சம்பாதித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சமீப காலமாக இளையராஜா குறித்த சர்சை தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இளையராஜாவுக்கும் டி எம் சௌந்தரராஜனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து தான் தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது, 1979 ஆம் ஆண்டு வெளிவந்த படம் நான் வாழ வைப்பேன்.

- Advertisement -

டி எம் சௌந்தரராஜன் பாடல்:

இந்த படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். இந்த படத்துக்கு இளையராஜா தான் இசையமைத்திருந்தார். மேலும், இந்த படத்தில் இடம் பெற்ற என்னோடு பாடுங்கள் என்ற பாடலை டி எம் சௌந்தரராஜன் பாடியிருந்தார். அப்போது பாடல் ரெக்கார்டிங் முடிந்த பிறகு அந்த பாடலை இளையராஜா கேட்டார். ஆனால், அவருக்கு திருப்தி கொடுக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் சிவாஜியின் பல படங்களுக்கு டி எம் சௌந்தரராஜன் பாடல்கள் எழுதி இருக்கிறார்.

இளையராஜா செய்த செயல்:

ஆனால், அதைப்பற்றி எல்லாம் இளையராஜா யோசிக்கவில்லை. உடனே அவர் என்னோடு பாடுங்கள் என்ற பாடலை டி.எம். சௌந்தரராஜ்க்கு பதிலாக அன்று தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பாடவராக இருந்த எஸ் பி பாலசுப்ரமணியனை வைத்து பாட வைத்திருக்கிறார். இதனால் டி எம் சௌந்தராஜனுக்கும் இளையராஜவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு விட்டது. இருந்தாலும், இந்த படத்தில் வரும் எந்தன் பொன் வண்ணமே என்ற பாடலை டி எம் சௌந்தரராஜன் பாடியிருந்தார்.

-விளம்பரம்-

SPB பாடிய பாடல்:

அதேபோல் திருத்தேரில் வருகின்ற நிலவே என்ற பாடலை எஸ் பி பி பாடியிருக்கிறார். இந்த படத்தில் இரு பாடல்களை டிஎஸ்பிபி பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இளையராஜா அவர்கள் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார்.

இளையராஜா திரைப்பயணம்:

இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார். இவர் இசையமைப்பாளர், பாடகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், இவர் பாடல் வரிகளை எழுதுபவர் என்று பலருக்கும் தெரியாத ஒன்று. தற்போது இளையராஜாவின் பயோபிக் படத்தை பாலிவுட் இயக்குனர் பால்கி எடுக்க இருக்கும் தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement