மூன்றாம் பிறை பாடலில் வந்த இதே இசையை ரஜினி பாட்டில் கவனித்துள்ளீர்களா ?

0
29679
mundram
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. சினிமா திரையுலகில் இசைஞானி இளையராஜாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். 80,90 காலங்களில் இருந்தே இளையராஜாவின் இசைக்கு வசப்படாத இதயங்கள் உள்ளதா என்று கூறுமளவிற்கு புகழின் உச்சத்தில் உள்ளார். இளையராஜாவின் உண்மையான இயற்பெயர் ராசய்யா. இவர் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி என்ற படத்தில் இசை அமைத்ததன் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

-விளம்பரம்-
பாடலில் 2:40 நிமிடத்தில் பார்க்கவும்

இவர் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவர் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் இசையமைத்து உள்ளார். இவருடைய இசை திறமைக்கு பல விருதுகளை வாங்கி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இளையராஜா அவர்கள் நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமை பெற்றும், முறையாக பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்தில் கூட இவர் கலை பயணத்தை பாராட்டி பிரம்மாண்ட விழா ஒன்று நடத்தப்பட்டது. இந்நிலையில் கமல் நடிப்பில் வெளிவந்த மூன்றாம் பிறை படத்தின் பாடல் இசையும் , ரஜினி நடிப்பில் வெளிவந்த தம்பிக்கு எந்த ஊரு படத்தின் பாடல் இசையும் இளையராஜா ஓரே மாதிரி அமைத்திருக்கிறார். தற்போது இந்தப் பாடல் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

வீடியோவில் 3 : 05 நிமிடத்தில் பார்க்கவும்

1982 ஆம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் மூன்றாம் பிறை. இந்த படத்தில் கமலஹாசன், ஸ்ரீதேவி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் வெளிவந்த பூங்காற்று புதிதானது என்ற பாடலை இளையராஜா இசை அமைத்து இருந்தார். பின் இரண்டு வருடங்கள் கழித்து 1984 ஆம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்த தம்பிக்கு எந்த ஊரு படத்தில் ரஜினிகாந்த், மாதவி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தில் வெளியான என் வாழ்வில் வரும் அன்பே வா என்ற இந்த பாடலுக்கும் அதே இசையை இளையராஜா பயன்படுத்தி உள்ளார். தற்போது இந்த இரண்டு பாடல்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. சமீபத்தில் இளையராஜா அவர்கள் தன்னுடைய பாடலை அனுமதி இல்லாமல் வேறு யாராவது பயன்படுத்தினால் அதற்கு காசு கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். ஆனால், தற்போது அவரே தன்னுடைய பாடலை மீண்டும் பயன்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement