லாக்டவுன் சமயத்தில் மொட்டை மாடியில் திருமணத்தை முடித்த பிக் பாஸ் வெற்றியாளர்.

0
3902
asitosh
- Advertisement -

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

-விளம்பரம்-

‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. கொரோனா நிவாரண பணிகளுக்காக பல திரையுலக பிரபலங்கள் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்த லாக் டவுன் டைமில் பல திரையுலக பிரபலங்கள் ஷூட்டிங் எதுவும் இல்லாததால், வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவு செய்து பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.

- Advertisement -

திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளமான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல விதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை ஷேர் செய்த வண்ணமுள்ளனர். அதில் பாட்டு பாடுவது, சமைத்து கொண்டிருப்பது, ஜிம்மில் வொர்க்கவுட் செய்வது, பாடலுக்கு நடனமாடுவது, டிக் டாக் செய்வது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் வெளியாகி வருகின்றது.

இந்நிலையில், இந்த லாக் டவுன் டைமில் நடைபெற்ற ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி ஒன்றின் வீடியோ பதிவு வெளி வந்திருக்கிறது. ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் அஷுதோஷ் கௌஷிக். இவர் ‘லால் ரேங், ஜில்லா கஷியாபாத், படாஸ், ஷார்ட்கட் ரோமியோ, கிஷ்மத் லவ் பைசா தில்லி’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-
Ashutosh Kaushik

‘கலர்ஸ் டிவி’-யில் ஒளிபரப்பான ஹிந்தி ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 2-வில் நடிகர் அஷுதோஷ் கௌஷிக் தான் வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி நடிகர் அஷுதோஷ் கௌஷிக், அவரது காதலி அர்பிதா திவாரியை திருமணம் செய்து கொண்டார். இப்போது லாக் டவுன் என்பதால், அஷுதோஷ் கௌஷிக் வீட்டின் மொட்டை மாடியில் வைத்து தான் அவரது திருமணமே நடைபெற்றிருக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Advertisement