இமைக்கா நொடிகள் இயக்குனரின் அடுத்த படைப்பு…!இனையப்போகும் செம மாஸ் நடிகர்..!

0
546
Ajay-gyanamuthu
- Advertisement -

சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான “இமைக்கா  நொடிகள் ” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது . அதர்வா, அனுரன் காஷ்யப் போன்றவர்களின் நடிப்பும் இதில் மிகவும் பாராட்டை பெற்றனர். 

-விளம்பரம்-

ஒரு சில திரையரங்குகளில் இன்னமும் இந்த படம் 100 நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இமைக்கா நொடிகள் படத்தை அடுத்து இயக்குனர் அஜய் யாரை வைத்து படம் எடுப்பார் என்று அனைவரது கண்களும் இயக்குனர் அஜய் மீதே இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கும் அடுத்த படத்தின் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அஜய்யின் அடுத்த படத்தில் நடிகர் சீயான் விக்ரம் நடிக்கிறார் என்ற சில செய்திகள் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

இயக்குனர் அஜய் ‘டிமான்டி காலனி’ திரைபடம் வெளியான போதே அஜய் இயக்கும் அடுத்த படத்தில் விக்ரம் தான் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியானது. தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து விக்ரம் மற்றும் அஜய் கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.விக்ரம் தற்போது கடாரம் கொண்டான், கர்ணன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பின்னர் அஜய் இயக்கத்தில் நடிப்பார் என்றும் என்று நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது.    

-விளம்பரம்-
Advertisement