‘2 நாய்களை வரவேற்கிறேன்’ இமான் வெளியிட்ட திருமண அறிக்கை போன்றே அவரின் முன்னாள் மனைவி வெளியிட்ட அறிக்கை.

0
473
imman
- Advertisement -

சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட இமான் வெளியிட்ட அறிக்கையை போலவே தான் வாங்கிய நாய்கள் குறித்து இமானின் முன்னாள் மனைவி மோனிகா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று வைரலாகி வருகிறது. இசையமைப்பாளர் இமான் மோனிகா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு இரண்டு மகள்களும் பிறந்தனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்து இருந்தார் இமான். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இமான் எமலி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 2-18-1024x683.jpg

இந்நிலையில் தனது மறுமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்த இமான் ‘ மே 15, 2022 ஞாயிற்றுக்கிழமை அமலி உபால்டுடன் (மறைந்த பப்ளிசிட்டி டிசைனர் திரு. உபால்ட் மற்றும் திருமதி சந்திரா உபால்டின் மகள்) எனது மறுமணம் பற்றிய செய்தியைப் பகிர்வதில் மகிழ்ச்சி.எனது கடினமான காலங்களில் வலுவான தூணாக இருந்த எனது தந்தை திரு.ஜே.டேவிட் கிருபாகர தாஸ் அவர்களுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் இந்த ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் ஒரு முக்கிய தீர்வாகவும், மகிழ்ச்சியின் ஆதாரமாகவும் விளங்கும். உண்மையில் மறைந்த என் தாயார் திருமதி.மஞ்சுளா டேவிட்டின் ஆசீர்வாதம் இது.

இதையும் பாருங்க : பிராமண சகோதர சகோதரிகள் எழுந்து நிற்க வேண்டிய நேரம் இது – நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்துவிட்டு காயத்ரி ரகுராம் கண்டன ககுரல்.

- Advertisement -

மகள்களை எதிர்பார்த்த இமான் :

அற்புதமான நபரான அமலியை அடையச் செய்த எனது குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமலியின் அன்பு மகள் நேத்ரா இனிமேல் எனது மூன்றாவது மகளாக இருப்பார்! மேலும் நேத்ராவின் தந்தையாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியையும் அற்புதமான உணர்வையும் தருகிறது. எங்கள் திருமண நாளில் என் அன்பு மகள்கள் வெரோனிகா மற்றும் பிளெசிகாவை நான் தனிப்பட்ட முறையில் மிஸ் செய்கிறேன். என்றாவது ஒரு நாள் எனது மகள்கள் வீட்டிற்கு வருவார்கள் என நாங்கள் பொறுமையாக காத்திருக்கிறோம்.

This image has an empty alt attribute; its file name is 1-425-1024x568.jpg

-விளம்பரம்-

நானும், அமலியும், நேத்ராவும் மற்றும் எங்கள் உறவினர்கள் அனைவரும் வெரோனிகா மற்றும் பிளெசிகாவை அதிக அன்புடன் வரவேற்போம்.நிபந்தனையற்ற மற்றும் விலைமதிப்பற்ற பாசத்தை பகிர்ந்து கொண்ட அமலியின் பெரிய குடும்பத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். இத்தனை வருடங்களாக உறுதுணையாக இருந்த எனது இசை ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறிப்பிட்டு இருந்தார்.

புதிய நாய்களை வரவேற்ற மோனிகா :

இந்நிலையில் மோனிகா இன்று தனது சமூக வலைத்தளத்தில் இமான் தனது திருமணத்தை அறிவித்ததை போன்றே ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் எனது புதிய குடும்ப உறுப்பினர்கள் குறித்த தகவலை ஷேர செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மே 20 ஆம் தேதியான இன்று இரண்டு Dalmatians நாய்களை வீட்டிற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.என்னுடைய கடினமான காலங்களில் எனக்கு தூணாக இருந்த எனது அப்பாவுக்கு எப்போதும் நன்றி கடன்பட்டுள்ளேன்.

பதிவியில் இமான் பெயரை குறிப்பிட்ட மோனிகா :

கடந்த சில ஆண்டுகளாக நானும் என் குடும்பத்தினரும் பட்ட வேதனைக்கு இந்த செல்லப்பிராணிகள்தான் மருந்து. கடவுள் மற்றும் என் பெற்றோரிடமிருந்து எனக்கு கிடைடைத்த ஆசிர்வதிக்கப்பட்ட பரிசு.இந்த செல்ல பிராணிகளான லியா மற்றும் மியா எனக்கு கிடைக்க துணையாக இருந்த என் குடும்பத்தினருக்கும் என் நலம் விருப்பிகளுக்கும் நன்றி. இந்த நாய்கள் இனி மேல் என் 3வது மற்றும் 4வது மகள்களாக இருப்பார்கள் என இமானின் அறிக்கையை இமிடேட் செய்து புதிதாக வீட்டிற்கு வந்துள்ள நாய்களை வரவேற்றுள்ள மோனிகா மேலும் அவர்களுக்கு அம்மாவாக இருப்பதில் பெருமை கொள்வதாகவும் இதுவரை உண்மையான அன்பையும் சந்தோஷத்தையும் பெறாத எனக்கும் எனது மகள்களுக்கும் இது உண்மையிலேயே சந்தோஷத்தை தரும் என்றும் எங்களின் எதிர்காலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு #dimman #GodBless என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டுள்ளார் .

Advertisement