இந்திய சினிமாவிலேயே பணக்கார சினிமா குடும்பம் பற்றிய தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்தியா சினிமாவைப் பொறுத்தவரையில் பாலிவுட் நடிகர்களின் குடும்பம் தான் ஆதிக்கம் செய்கிறது. அது மட்டும் இல்லாமல் பாலிவுட் நடிகர் குடும்பம் தான் அதிக சொத்தும் வைத்திருக்கிறது என்று கூறுகிறார்கள். இதைதான் பலரும் உண்மை என்று நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மை இல்லை.
பாலிவுட்டில் தற்போது இருக்கும் முன்னணி நடிகர்களும், தயாரிப்பாளர்களாக இருப்பவர்களாகவே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். அதே போல் தான் தெலுங்கு சினிமாவிலும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் அந்த திரையுலகில் அதிகம் செலுத்தி இருக்கிறார்கள். இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அந்த வகையில் ஒரே குடும்பத்தில் இருந்து நாலு சூப்பர் ஸ்டார், தயாரிப்பு நிறுவனங்கள், இயக்குனர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.
அதோடு அந்த குடும்பம் சினிமாவில் மட்டுமில்லாமல் பிற தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் இவர்களுடைய சொத்து மதிப்பும் பல்லாயிரம் கோடிகளை தாண்டிருக்கிறது. இந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பாதியை ஆண்டு வருபவர்கள் என்றால் அது அல்லு- கொண்டிலா குடும்பம் தான்.
அல்லு-கொண்டிலா குடும்பம் :
இவர்களை மெகா குடும்பம் என்று சொல்வார்கள். தாத்தாவில் ஆரம்பித்து பேரன், பேத்தி வரை என மூன்று தலைமுறைகளாக தெலுங்கு சினிமா உலகில் இந்த குடும்பம் தான் ஆதிக்கம் செய்து கொண்டிருக்கின்றது. 1950 காலகட்டத்தில் அல்லு ராமலிங்க ஐயா பிரபல காமெடி நடிகராக சினிமாவில் தன்னுடைய ஆதிக்கத்தை தொடங்க ஆரம்பித்தார். இவர் நடிகராக மட்டும் இல்லாமல் சில படங்களையும் தயாரித்து இருந்தார். இவருடைய மகள் சுரேகா, தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியை திருமணம் செய்து கொண்டார்.
மெகா குடும்பம் :
இதனாலேயே மெகா குடும்பம் வளர ஆரம்பித்தது. இவர்களுடைய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான் ராம்சரண், அல்லு அர்ஜுன், பவன் கல்யாண், நாகேந்திர பாபு, வருண் தேஜ், சாய் தரம் தேஜ் போன்ற பல நடிகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே தெலுங்கில் பிரபலமான நடிகராக இருக்கிறார்கள். இந்த மெகா குடும்பம் தான் இந்திய சினிமாவில் பணக்கார குடும்பமாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த அல்லு கொண்டிலா குடும்பத்திலேயே சிரஞ்சீவி அவருடைய மகன் ராம்சரண் தான் பணக்காரர்கள் என்று கூறப்படுகிறது.
சொத்து மதிப்பு:
இவர்களுக்கு இணையாக அல்லு அரவிந்த் மற்றும் அல்லு அர்ஜுனும் சொத்துக்களை வைத்திருக்கிறார்கள். இவர்கள் பல வீடுகள், பல்லாயிரக்கணக்கான நிலங்கள், சொகுசுகார்கள், வெளிநாடுகளில் சொத்து என இவருடைய சொத்து மதிப்பு நீண்டு கொண்டே செல்லும். இது மட்டுமில்லாமல் இவர்கள் பல தயாரிப்பு நிறுவனங்களையும் வைத்து இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த குடும்பம் அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது தெலுங்கு சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்களின் பட்டியலில் ராம் சரணம் அவருடைய உறவினர் அல்லு அர்ஜுனனின் பெயர் தான் முன்னிலையில் இருக்கும். இவர்களுடைய மொத்த சொத்து மதிப்பு 6000 கோடியை தாண்டும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.