நட்டியின் துப்பறியும் த்ரில்லர் ஈர்த்ததா ? ‘இன்ஃபினிட்டி’ முழு விமர்சனம் இதோ.

0
3577
- Advertisement -

இயக்குனர் சாய் கார்த்திக் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் உருவாகி இருக்கும் படம் இன்பினிட்டி. இந்த படத்தில் நடராஜ், வித்யா பிரதீப்,முனிஸ்காந்த் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை மென்பனி ப்ரொடக்ஷன் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு பாலசுப்ரமணியன் ஜி இசையமைத்திருக்கிறார். இன்று வெளியாகி இருக்கும் இன்ஃபினிட்டி படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் சென்னையில் ஒரு இளம் பெண் அநியாயமாக படுகொலை செய்யப்படுகிறார். இவரை தொடர்ந்து ஒரு எழுத்தாளர், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு குடிகாரன் என அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது. ஆனால், இந்த கொலைகள் ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை. பின் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ அதிகாரியாக இருக்கும் நட்ராஜ் இடம் வருகிறது. இந்த கொலைகளை பரிசோதிக்கும் மருத்துவராக வித்யா பிரதீப் இருக்கிறார்.

- Advertisement -

இந்த கொலைகளுக்கு எல்லாம் காரணம் என்ன? இதை எல்லாம் செய்வது யார்? குற்றவாளியை நடராஜ் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படத்தில் நடராஜ் அவர்கள் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சிபிஐ அதிகாரியாக அவர் எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றும் பாராட்டும் வகையில் இருக்கிறது. சொல்லப்போனால், கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்திருக்கிறார்.

இவரை அடுத்து மருத்துவராக வித்யா பிரதீப் நடித்திருக்கிறார். இவர் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். இவர்களை அடுத்து காவலராக வரும் முனீஸ் காந்த் காமெடி எல்லாம் சிரிக்க வைக்கிறது. மேலும், பிற நடிகர்களும் தங்களது கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்கள். படத்தில் இரண்டு பாடல்கள் கதையை நகர்த்த உதவுகிறது. ஆனாலும், பெரிதாக ரசிகர்கள் இருக்கவில்லை.

-விளம்பரம்-

கொலை, விசாரணை, குற்றவாளிகள் என்று திரில்லாக படம் சென்று கொண்டிருக்கின்றது. அதோடு குற்றங்கள் குறைவது தனி மனிதனின் ஒழுக்கத்தில் தான் என்ற மெசேஜையும் இயக்குனர் சொல்லி இருக்கிறார். ஆனால், இன்னும் கதைக்களத்தில் சுவாரசியத்தையும் சஸ்பெண்ஸ் இன்னும் கொடுத்திருந்தால் விறுவிறுப்பாக சென்றிருக்கும். இடைவெளிக்கு பிறகு தான் படமே சூடு பிடிக்கிறது. முதல் பாதி பொறுமையாக நகருகிறது. மொத்தத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடராஜின் இன்பினிட்டி படம் சுமாரான படமாக இருக்கிறது.

நிறை:

நடராஜ் நடிப்பு சிறப்பு

கிளைமாக்ஸ் காட்சி அருமை

இரண்டாம் பாதி நன்றாக செல்கிறது

குறை:

சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பாடல்கள் இல்லை

முதல் பாதி மெதுவாக செல்கிறது

இயக்குனர் கதைகளத்தில் இன்னும் அழுத்தத்தை கொடுத்திருக்கலாம்

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

மொத்தத்தில் இன்ஃபினிட்டி- முற்றுப்புள்ளி வைத்துவிட்டது

Advertisement