அஜித் பற்றிய சில உண்மை தகவல் !

0
5409
thala
- Advertisement -

யார் பின்பலமும் இல்லாமல் தமிழ் சினிமா துறைக்கு வந்த இளைஞன் . மெக்கானிக்காக இருந்த இவர் பைக் ஓட்டுவதில் பிரியர்.

-விளம்பரம்-

- Advertisement -

பைக் ரேஸில் சேர பணத்துக்காக திரைத்துறையை தேடிவந்தவர் . பல இடம் தனியாக ஏறி பல அவமானங்களுக்கு பின் நடிக்க வாய்ப்புகிடைத்தது. ஆனாலும் இவர் வசன உச்சரிப்பு யாருக்கும் பிடிக்கவில்லை, பல இயக்குநர்களின் வீட்டில் வாட்ச்மேன் போல காத்துகிடந்து வாய்ப்பு பெற்று தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.

-விளம்பரம்-

நடித்ததற்கு சம்பளம் கேட்டு இயக்குநர்கள் வீடு தயாரிப்பாளர்வீடு என பகல் இரவாக அலைந்தார். பின் கிடைத்த பனத்தை வைத்து ரேஸில் சேர்ந்தார் .

ரேஸில் மிக பெரிய விபத்துநடக்க பல அறுவை சிகிச்சைகளோடு உயிர்திரும்பினார். பின் ரேஸ் ஆசையை விட்டுவிட்டு நடிப்பை தேர்ந்தெடுத்தார்.

அவர் நடித்த ஆசை படம் மூலம் நல்ல நடிகன் என்ற பெயர் பெற்றார். தொடர்ந்து பல தோல்வி படங்கள் சில வெற்றிபடங்கள் கொடுத்தவந்தார். ஆனாலும் இவருக்கு வசனமே வராது என்று பல நக்கலடித்தனர்.

பின் வாலி படம் மூலம் தன் கண்களும் வசனம் பேசுமடா என்று சொல்லாமல் கூறி அந்த நடிப்புக்காக விருதுகளை பெற்றார்.

ரசிகர்கூட்டம் உருவாகியது.நாளடைவில் அஜித்தை தல என்று ரசிகர்கள் கூப்பிட ஆரம்பித்தனர்.

பல திரைப்படங்களுக்காக தென்னிந்திய ஆஸ்கார் என்றழைக்கபடும் பிலிம்பேர் விருதுகளை பெற்றார். அதிக விருதுகளை வென்ற ஒரே இளம் கதாநாயகன் என்ற சிறப்பை பெற்றார்.

தன் காதலி நடிகை ஷாலினி அவர்களை திருமனம் செய்துகொன்டார்.

கார் ரேஸில் கலந்து பல பதக்கங்களை வென்றார். தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தார். பல அறுவை சிகிச்சைக்கு பின்னரும் தன் படங்களில் வரும் உயிருக்கு ஆபத்தான சன்டை காட்சியில் டூப் போடாமல் நடித்தார்.

 

பின் திடிரென்று ரசிகர்கள் நலன் கருதி ரசிகர் மன்றங்களை கலைத்தார். அப்போது இனி அஜித் அவ்ளோதான் என்ற பலர் கூறினர். கலைத்தாலும் அவரது 50வது திரைப்படத்திற்கு கூடிய கூட்டத்தை பார்த்து தமிழ்திரையுலகம்மிரன்டுபோனது.

திரைதுறையில் ரஜினிக்கு பின் அதிகம் ரசிகர்களை கொண்டவர். நல்லமனம் கொண்ட மனிதன், ரசிகனை சுயநலத்துக்காக பயன்படுத்தாமல் அவன் வாழ்க்கையில் அக்கறை கொண்ட ஒரே நடிகர்.

எங்கும் எதற்கும் பயப்படாதவர். நேர்பட பேசும் தைரியசாலி. இதை தவிர ஹெலிகாப்டர்  ஓட்டுவதற்கு லைசென்ஸ் வைத்துள்ள ஒரே ஆசிய நடிகர் என்ற சிறப்பை பெற்றவர்.

அன்று எவர் துனையும் இல்லாம் சினிமாவுக்கு வந்த அஜித் இன்று தமிழ்நாட்டின் தாரக மந்திரமான “தல” யாக திகழ்கிறார் என்பதே உண்மை.

எதிா்ப்பு அதிகமாகிறது என்றால் அது வெறுப்பின் அறிகுறி அல்ல!அது உன் வளா்ச்சியின் அறிகுறி.

Advertisement