தான் சொல்லாததை எழுதிய பத்திரிகை வெளியிட்ட செய்தி – விஜய்யே பகிர்ந்த விஷயம் – இதனால் தான் 10 ஆண்டுகளாக பேட்டி தரலையாம்.

0
456
Vijay
- Advertisement -

பொதுவாக விஜய் படங்கள் என்றாலே ரிலீசுக்கு முன்னர் இசை வெளியிட்டு விழா ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்க்கப்படும். அதுவும் இசை வெளியிட்டு விழாவில் விஜய்யின் பேச்சை கேட்கவே அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துகொண்டு இருப்பார்கள். இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் இசை வெளியிட்டு விழாவை ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்க, பீஸ்ட் படத்திற்கு இசை வெளியீட்டு விழா இல்லை என்று அறிவிப்பு வெளியானது. இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் பெரும் அப்செட் அடைந்தனர். இப்படி ஒரு நிலையில் 10 ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய் பீஸ்ட் படத்திற்க்காக நேற்று சன் டிவியில் அளித்த பேட்டி ஒன்று ஒளிபரப்பானது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-49.png

நேற்று ஒளிபாரப்பான இந்த நிகழ்ச்சியில் முதல் கேள்வியாக இயக்குனர் நெல்சன், விஜய்யிடம் ‘ஏன் 10 ஆண்டுகளாக எந்த பேட்டியும் கொடுக்கவில்லை’ என்று கேட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த விஜய் ‘நேரம் இல்லாததால் பேட்டி கொடுக்காமல் இல்ல. 10 ஆண்டுக்கு முன் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தேன். அதில் அவர்கள் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லி இருந்தேன். ஆனால், நான் ஏதோ வேறு விதமாக பேசியது போல எழுதிவிட்டார்கள்.

இதையும் பாருங்க : செல்வராகவன் படத்தில் கர்ணன் பட நடிகரை கமிட் செய்த மோகன் – ஏதோ பெருசா பண்றார் போல.

- Advertisement -

10 ஆண்டு பேட்டி கொடுக்காத காரணம் :

எப்போதும் பேசும் போது வேறு மாதிரி இருக்கும், அதை எழுதும் போது வேறு மாதிரி தானே இருக்கும். ஆனால், அந்த விஷயத்தை நான் படித்ததும் எனக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. பலரும் என்னிடம் ‘என்ன இவ்ளோ கோவமா பேசி இருக்கிறீர்கள்’ என்றெல்லாம் கேட்டனர். எல்லாரிடமும் நாம் போய் விளக்கம் கொடுக்க முடியாது இல்ல. அதனால் சரி, இனிமே பேட்டியே கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்.

பத்திரிக்கையில் வந்த செய்தி :

இருந்தாலும் நான் பேச நினைப்பதை எல்லாம் இசை வெளியீட்டு விழாவில் நான் பேசிவிடுவேன். அதிலும் ‘என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே’ என்று நான் சொல்லும் போது எனது ரசிகர்களை நினைத்து நான் மகிழ்ச்சியாடைவேன். ஆனால், இப்போது 10 வருடம் கழித்து உனக்கு பேட்டி கொடுக்கிறேன் என்று கூறி இருக்கிறார் விஜய். மேலும், இந்த பேட்டியில் இன்னும் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார் விஜய்.

-விளம்பரம்-

விஜய் சொன்ன அந்த விஷயம் :

இப்படி ஒரு நிலையில் விஜய் சொன்ன அந்த குறிப்பிட்ட பேட்டியின் பின்னணி பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அது என்னவெனில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார். இதுகுறித்து பத்திரிகையில் வந்த செய்தியில் ‘குழந்தைகளுக்கு பிடித்த ஒரு விஷயம் தான் பெரிய ரீச் ஆகும் அந்த குழந்தைகளோட சிரிப்பதான் என் மார்க்கெட் வேல்யூ. இன்னும் சொல்லவா ? இப்போ நிறைய ஹீரோக்கள் இருக்கலாம், என் ரசிகர்கள் கூட அந்த ஹீரோக்கள் படத்தையும் ரசிக்கலாம்.

கடுப்பாகி விஜய் போட்ட பதிவு :

ஆனால், அந்த ஹீரோக்கள் படத்தை பார்க்கிற எல்லோருக்கும் என் படம் பாப்பாங்க, அதனால்தான். இங்கே ஒன் மோர் விஷயம் ப்ளீஸ், என் மார்க்கெட் வேல்யூ உச்சத்தில் இருக்கிற அப்பவும் சரி மற்ற நேரங்களிலும் சரி எப்பவுமே நான் தான் இயக்குனர்களில் ஃபெவரைட்டாக இருந்தது இல்லை. இப்ப கூட யாரும் என் கால் ஷீட்டுக்கா காத்திருக்கிறது இல்லை. அதனால் இந்த ஸ்டார் வேல்யூ பற்றி நான் கவலைப்படுவது இல்லை என்று விஜய் அதில் கூறி இருக்கிறார். ஆனால், இந்த விஷயத்தை கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய், அவர்களின் சொந்த பதிலை எழுதுவதற்கு அப்புறம் எதுக்கு பேட்டி கொடுக்கணும் என்று பதிவிட்டு இருக்கிறார். தற்போது விஜய்யின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

Advertisement