‘போடு ஓ** வா வா’ – நேற்றய போட்டியில் ஸ்டம்பிற்கு பின் லோக்கல் சென்னை பாஷையில் பேசிய தினேஷ் கார்த்திக். இதோ வீடியோ.

0
2140
dk
- Advertisement -

நேற்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் மும்பை அணிக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணியில் விளையாடிய தினேஷ் கார்த்திக் ஸ்டம்பிற்கு பின்னால் சென்னை லோக்கல் பாஷையில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவில் ஆண்டு தோரும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் கடந்த ஆண்டு கொரோனா பிரச்சனை காரணமாக ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற்றது. இதனால் இந்திய ரசிகர்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்தனர். இப்படி ஒரு நிலையில் ஐபிஎல் 12 தொடர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துவங்கியது. இம்முறை இந்தியாவில் நடைபெறுவதால் ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்துள்ளனர்.

-விளம்பரம்-

இந்த தொடரின் இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று 5வது போட்டி சென்னை மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை மட்டுமே எடுத்தது.

- Advertisement -

இதை தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 142 ரன்களை எடுத்தது. இதன் மூலம் மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது கொல்கத்தா அணி பந்து வீசிய போது 13 வது ஓவரில் வருண் சக்கரவர்த்தி 2வது பந்து வீசிய போது ஸ்டம்பிற்கு பின்னால் இருந்த் தினேஷ் கார்த்திக் ‘போடு கோ** வா வா’ என்று சென்னை லோக்கல் தமிழில் கேட்ட வார்த்தை பேசியுள்ளார். அது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக பதிவாகியுள்ளது.

தினேஷ் கார்த்திக், வருண் பந்து வீசும் போது தமிழில் பேசுவது வாடிக்கையான ஒரு விஷயம் தான். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது கூட வருண் சக்கரவர்த்தி பந்து வீசும் போதெல்லாம் கீப்பிங் செய்து கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் தமிழில் பேசி அவரை உற்சாகப்படுத்தினார், அந்த வீடியோ கூட சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பிறவியது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement