வேறு இயக்குனர், அஜித் பட நடிகை.! வெளியானது இரும்புத்திரை 2 பற்றிய அறிவிப்பு.!

0
646
- Advertisement -

புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இரும்புத்திரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. விஷால் ஹீரோவாக நடிக்க ஆக்சன் கிங் அர்ஜுன் வில்லனாக நடித்திருந்தார். நவீன உலகில் நடைபெற்று வரும் நூதன டிஜிட்டல் திருடர்களை பற்றிய கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது இந்த திரைப்படம்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மேலும், இந்த படத்தில் இயக்குனர் மித்ரனும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து மித்ரன் நடித்திருந்தார். ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு அமைந்துள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை புதுமுக இயக்குனர் ஆனந்த் என்பவர் இயக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் கமிட் ஆகியுள்ளார்.

விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது அஜித் நடித்து நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்க இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement