என்னது, மாவீரன் படம் 2006 வெளியான இந்த படத்தின் காப்பியா ? ப்ளூ சட்டையின் சேட்டையான பதிவு

0
2320
- Advertisement -

சமீபத்தில் வெளியான மாவீரன் திரைப்படம் கொரியன் படத்தின் காபி என்று ப்ளூ சட்டை பதிவிட்டு இருக்கும் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பிரின்ஸ் படத்தின் படு தோல்வியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் மாவீரன். . இந்த படம் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

படத்தில் கரையோரம் வாழ்ந்து வரும் மக்கள் வறுமையின் பிடியில் வாழ்கிறார்கள். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு அரசு கொண்டு செல்கிறது. ஆனால், அரசு வழங்கிய அந்த அடுக்குமாடி வீடு தரமில்லாமல் இருப்பதால் அடுத்தடுத்து பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் கதாநாயகன் சத்யா குடும்பம் பல பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறது.

- Advertisement -

பின் இந்த அடுக்குமாடி குடியிருப்பு பிரச்சனையில் அரசியலுடைய அதிகாரம் இருப்பதால் கதாநாயகனால் எதுவும் செய்யாமல் போகிறது. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கதாநாயகன் தற்கொலை முயற்சியில் இறங்குகிறார். அப்போது அவருக்கு பின்னால் ஒரு குரல் கேட்கிறது. அதுவரை என்ன செய்வதென்று புரியாமல் பரிதவித்த கதாநாயகன் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார். அந்த குரலினால் அவருடைய வாழ்க்கையே மாறுகிறது.

அந்த குரல் யார்? கதாநாயகனின் பிரச்சனை தீர்ந்ததா? அரசியலின் அதிகாரம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் பெற்று வரும் நிலையில் இந்த படம் 2006 ஆம் ஆண்டு Stranger than Fiction என்ற கொரியன் படத்தின் காபி என்று ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார். அதே போல 2020 ஆம் ஆண்டு வெளியான Hitman Agent Jun என்று படத்தின் காபி என்று கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படம் வெளியாகும் முன்பே ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை கேலி செய்யும் விதமாக பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில் ‘மாவீரன் இம்மாதம் 14 அன்று வெளியாகும் நிலையில்… 12 ஆம் தேதி டாம் க்ரூஸ் நடித்த Mission Impossible வெளியாகிறது. முதல் நாளுக்கான IMAX முன்பதிவு நிரம்பி வருகிறது. ‘குறுக்க இந்த கௌஷிக் வந்தா?’ மொமன்ட் என்று சிங்கம் புலி காமெடியின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

இந்த பதிவு வைரலானதை தொடர்ந்து ப்ளூ சட்டையின் இந்த பதிவிற்கு பதிலடி கொடுத்த மாவீரன் படத்தின் தயாரிப்பாளர் அருண் விச்வா போட்டிருந்த பதிவில் “வணக்கம் சார், இமை அருண் விஸ்வா, மாவீரன் படத்தோட தயாரிப்பாளர்! எனக்கு என் படம் தான் எனக்கு அவதார், ஆர்ஆர்ஆர், மிஷன் இம்பாஸிபில் எல்லாமே. இந்த வயசுக்கு இந்த பிக் ஷேர் செய்திருக்க வேண்டாம் சார் என்றுகூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement