யாரும் எதிர்பாரத நிலையில் அதிரடியாக குறைந்த தக்காளியின் விலை, இது தான் காரணமா?              

0
1448
- Advertisement -

சமீப காலமாகவே தக்காளி என்ற பெயரை அனைவருக்கும் அது ஏதோ பணக்காரர்கள் மட்டும் பயன்படுத்துவது போல் இருந்தது. தமிழகம் உட்பட இந்தியாவின் சில மாநிலங்களில் தக்காளியின் விலை தாறுமாறாக உயர்ந்தது. தக்காளியின் விலை 200 ரூபாய் தாண்டியும் சென்றது. தொடர்ந்து உயர்ந்த நிலையில் தமிழகத்தில் ரேசன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. நேற்று தக்காளியின் விலை ரூ 150 விற்கப்பட்டு வந்தது. தொடர்ந்து உயர்ந்து வந்த தக்காளியின் விலை சற்று குறைவாகவே விற்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

தக்காளி உயர்வதற்க்கான காரணம்:

தக்காளியின் விலை சில மாதங்களாகவே உயர்ந்து வந்த நிலையிலே இருந்து. இதற்க்கான காரணம் என்னவென்று ஆராய்ச்சி செய்ததில் இதற்க்கான காரணம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விவசாயிகள் தக்காளியை பயிரிடவில்லை என்றும் அதற்க்கான காரணம் என்னவென்றால் அதற்க்கு பதிலாக வேறு சில காய்கறிகளை பயிரிட்டது தான் என்றும் சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதற்க்கான காரணம் என்னவென்றால் மார்ச் ஏப்ரல் மாதங்களில் பயிரிட்ட தக்காளி பாழடைந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

ஆகையால் அவர்கள் தக்காளியை பயிரிட முடியவில்லை என்றும் தகவல்கள் வெளியாயின. மகாராஷ்டிரா மற்றும் உத்திர பிரேதசத்தில் தான் இந்தியாவில் அதிக அளவில் தக்காளிகள் விவசாயம் செய்யப்படுகிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் வரத்து குறைந்ததாலும் பூச்சி பிரட்சனையலும் தக்களிக்கு தட்டுப்பாடு அதிகரித்தது. தக்காளியின் உயர்விற்கு மழையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடும் மழையின் காரணமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தக்காளியை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய முடியாததால் அங்கங்கே சில்லறை விற்பனையில் தக்காளியின் விலை பன் மடங்காக உயர்ந்தது.

குறைந்த தக்காளியின் விலை:

தக்காளியின் வரத்தை பொருத்துவிலையின் ஏற்றமும் இறக்குமகவே இறுக்கமாக இருந்துவந்தது. ஒரு கிலோ தக்காளியின் விலை 40 -50 ரூபாய்க்கு விற்ற காலம் போய் தற்போது 200 ரூபாய்வரை விற்ற தக்காளியின் விலை இருந்து வருகிறது. ஆனால் நேற்று கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 30 ரூபாய் குறைந்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

மேலும் முதல் ரக தக்காளி 120 ரூபாய்க்கும், இரண்டாம் ரக தக்காளி கிலோவிற்கு 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மூன்றாம் ரக தக்காளி அதை விட குறைவாக 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் கூறினார்கள். தக்காளி விலை குறைந்த நிலையில் மகிழ்ச்சியில் மக்கள்.       

Advertisement