‘நான் அமர்ந்திருக்கிற நாற்காலி கொல்கிறது’ மாமன்னன் படம் குறித்து வசந்தபாலன் விமர்சனம்.

0
2790
Vasanthabalan
- Advertisement -

மாமன்னன் படம் குறித்து இயக்குனர் வசந்த் பாலன் பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களை தொடர்ந்து வைகை புயல் வடிவேலு , பகத் பாசில் போன்ற பல முன்னணி நடிகர்களும் இந்த படத்தில் நடித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆ.ர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் தான் உதயநிதியின் கடைசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், அனைவரும் எதிர்பார்த்த உதயநிதியின் மாமன்னன் படம் மிக பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது.

- Advertisement -

மாமன்னன் படம்:

படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதிக்க வர்க்கத்தினரும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்று அனைவரையும் முன்னேற பார்க்கும் பட்டியலின மக்களுக்கும், இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன் திரைப்படம். இந்த படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை இயக்குனர் கூறி இருக்கிறார்.

மாமன்னன் படம் குறித்த தகவல்:

இந்த படத்தினை பார்த்து முதல்வர் மு. க. ஸ்டாலின், கமல்ஹாசன், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்கள். மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று இருந்தது,மட்டும் இல்லாமல் வசூலிலும் சாதனை படைத்து உள்ளது . இதனால் படக்குழு சமீபத்தில் வெற்றி விழா நடத்தி இருந்தது. அதன் பின் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படம் Netflix தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படம் இந்திய அளவில் முதல் இடத்திலும், உலக அளவில் ஒன்பதாவது இடத்தையும் பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இயக்குனர் வசந்த் பாலன் பதிவு:

இந்த நிலையில் இயக்குனர் வசந்த் பாலன் அவர்கள் மாமன்னன் படம் பார்த்து பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் மாமன்னன் படம் ஒரு முக்கியமான தனித்துவமான அரசியல் திரைப்படம். இந்த அரசியல் கதையில் நடிக்க சம்மதித்த உதயநிதி அவர்களை ஒரு பெரிய விஷயம் காட்சிகளில் தன்னுடைய குற்ற உணர்வை கையாலாகாத்தனத்தை காலங்காலமாக அடி வாங்கிய வழியை அடிமைத் தனத்தை பல்வேறு உடல் மொழிகளில் வெளிப்படுத்திய வைகை புயல் வடிவேலு அவர்கள் தான் திரை முழுக்க நிறைந்து இருக்கிறார்.

Maamannan

படம் குறித்து சொன்னது:

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் பரியன் தந்தையும் அவமானத்தை சந்திக்கும் இடமும் திரை உலகம் பார்க்காத நிஜம். அதுபோல இந்த படத்தில் கிணற்றில் பள்ளி மாணவர்கள் குளிக்கின்ற காட்சி, உதய் அவர்களை நாற்காலியில் அமர சொல்கிற காட்சி என்று பிறப்பால் ஒதுக்கப்படுகிற மனிதர்களின் வலியைத் திரையில் பார்க்கும் போது மெல்ல மெல்ல என் இரவை நான் அமர்ந்திருக்கிற நாற்காலி கொல்கிறது. நாற்காலி அமர அனுமதி மறுக்கப்படுகிறார்கள். நாற்காலியில் அமர முயலும் கதையே மாமன்னன். காலம் கொண்டாடும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement