விஜய்யின் முடி ஒரிஜினலா, இல்லை விக்கா – ரசிகரின் கேள்விக்கு இயக்குனர் பதில்.

0
51194
Vijay

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். விஜய்யின் முதல் படம் துவங்கி தற்போது வரை அவரது உருவத்தை பற்றிய பல விமர்சங்கள் எழுந்துகொண்டு தான் இருக்கிறது. அதிலும் சமீப காலமாக நடிகர் விஜய் பல்வேறு படங்களில் ஒரிஜினல் முடி வைத்து நடிக்கவில்லை என்ற பல கேலி கிண்டல் இருக்கத்தான் செய்து வருகிறது. அவ்வளவு ஏன் நடிகர் விஜய் தெறி, மெர்சல், பைரவா போன்ற பல படங்களில் விக் வைத்து தான் நடித்தார். அவ்வளவு ஏன் மாஸ்டர் படத்திற்கு முன் வந்த பிகில் படத்தில் கூட பிகில் கதாபாத்திரத்தில் விக் வைத்து தான் நடித்தார் விஜய்.

Image

ஆனால், சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் விக் எதுவும் பயன்படுத்தாமல், உண்மையாக தனது முடியை வளர்த்து தான் நடித்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் Hair Plantation செய்திருப்பதாக இயக்குனரும் நடிகருமான சித்ரா லக்ஷ்மணன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூர சம்ஹாரம் பெரியதம்பி சின்ன ராஜா போன்ற படங்களை இயக்கி தயாரித்த சித்ரா லட்சுமணன் பல்வேறு படங்களிலும் நடித்து இருக்கிறார் தற்போது சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் சித்ரா லட்சுமணன் அதில் சினிமா சம்பந்தப்பட்ட பல்வேறு தகவல்களை கொடுத்து வருகிறார்.

இதையும் பாருங்க : 90ஸ் கிட்ஸ்களின் திரிஷா. ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா ? இன்னிக்கி பிறந்தநாள்.

- Advertisement -

அந்த வகையில் சமீபத்தில் இவர் ரசிகர்களின் சில கேள்விகளுக்கு பதிலளித்தார் அப்போது ரசிகர் ஒருவர் நடிகர் விஜயின் முடி தற்போதெல்லாம் வித்தியாசமாக தெரிகிறதே அது விக்கா இல்லை Hair Plantation-னா என்று கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த அவர், விஜய் மட்டும் இல்ல இப்போது உள்ள தமிழ் சினிமா கதாநாயகர்களில் விஜய் மட்டும் இல்லை பல நடிகர்கள் Hair Plantation பண்ணியிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

வீடியோவில் 3 : 50 நிமிடத்தில் பார்க்கவும்

நடிகர் விஜய்யின் முடி குறித்து இது போன்ற கருத்துக்கள் வருவது ஒன்றும் புதிதான விஷயம் அல்ல. ஏற்கனவே நடிகரும் விஜய்யின் நெருங்கிய நண்பருமான ஸ்ரீமனிடம் மாஸ்டர் படம் வெளியாவதற்கு முன்பாகவே ட்விட்டரில் ரசிகர் ஒருவர் விஜய்யின் முடி குறித்து கேள்வி கேட்டிருந்தார். அதில், நடிகர் ஸ்ரீமன் சார், விஜய்மா விக் அணிவாரா என்று கேள்வி கேட்டிருந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பதில் அளித்த ஸ்ரீமன், இருக்கலாம் இல்லாமலும் போகலாம் இருப்பினும் அவர் எது செய்தாலும் அது படக்குழு படத்திற்காக செய்கின்ற விஷயம் முதலில் படத்தை பாருங்கள் சகோதரா தற்போது எந்த கருத்தையும் சொல்லாதீர்கள் தற்போது அமைதியாக கொரோனாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று பதில் அளித்து இருந்தார் ஸ்ரீமன் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement