‘மகளின் அன்ன பிரசன்னம்’ 11 ஆண்டுகள் கழித்து பிறந்த மகளின் முகத்தை முதன் முறையாக கட்டிய தீபா.

0
594
- Advertisement -

முதன் முறையாக தனது மகளின் முகத்தை காட்டி இருக்கிறார் தீபா. தமிழக மக்களின் அம்மாவாக இருந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. இவர் ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர். பின் இவர் எம்ஜிஆர் மீது இருந்த பற்றின் காரணமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றார்.அதற்கு பிறகு புரட்சித்தலைவி, அம்மா என்று இவருக்கு மக்கள் ஆதரவளித்தார்கள். மேலும், இவர் அரசியலில் நுழைவதற்கு முன் 120க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

ஆனால், இவர் அரசியலில் நுழைந்த உடன் சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி விட்டார். மேலும், ஜெயலலிதா அவர்கள் அதிமுக கட்சியில் இணைந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 1991ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக ஆனார். அதனை தொடர்ந்து இவர் ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக வகித்திருக்கிறார்.இவர் இறக்கும் போது கூட தமிழக்தின் முதல்வராக இருந்து தான் இறந்தார். இவருடைய இறப்பிற்கு பிறகு பலரும் நான் தான் ஜெயலலிதா வாரிசு என்று கூறியிருந்தார்கள்.

- Advertisement -

அந்த வகையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அடுத்த ஜெயலலிதா என்றெல்லாம் கூறியிருந்தார்கள். தீபா அவர்கள் மாதவன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவிற்கு மகள் பிறந்து இருந்தார். இதை அவர் தனது பிறந்தநாள் அன்று அன்று அறிவித்திருந்தார் தீபா. மேலும், இது குறித்து தீபாகூறிய போது , எங்களுக்கு திருமணம் ஆகி 11 வருடங்கள் ஆனது. எங்களிடம் எல்லாமே இருக்கிறது.

ஆனால், குழந்தை இல்லை என்ற ஏக்கம் எங்களுக்கு அதிகமாக இருந்தது. இத்தனை வருடத்தில் எத்தனையோ மருத்துவமனை போயிருக்கோம். எண்ணிக்கை சொல்ல முடியாது. அந்த அளவிற்கு அதிகமாக மருத்துவமனைகளில் அலைந்து விட்டோம். அந்த வலி வேதனை எல்லாம் அவ்வளவு கொடுமையானது.அது எங்களுக்கு மட்டும் தான் தெரியும். இப்போது எங்களுக்கு மகள் பிறந்திருக்கிறாள். அந்த சந்தோஷம் எங்களுடைய எல்லா வழிகளையும் மறக்கடித்து விட்டது.

-விளம்பரம்-

இந்த நேரம் இந்த உலகத்தில் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது நாங்களாகத்தான் இருப்போம் என்று நினைக்கிறேன். ஜெயலலிதா அத்தை மறைவிற்குப் பிறகு அரசியல் வெளிச்சத்திற்கு நான் வந்தபோது எல்லோரும் குழந்தையை மையப்படுத்தி தான் பேசினார்கள். குழந்தைக்கான முயற்சியில் ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்தது எங்களுக்கு வேதனையை கொடுத்தது. அதனால்தான் குழந்தை பிறக்கும் வரை வெளியில் சொல்லாமல் இருந்தோம்.

அக்டோபர் 31ஆம் தேதி தான் என்னுடைய மகள் பிறந்தாள். ஆனால், என்னுடைய பிறந்தநாள் அன்று என் மகளின் பிறந்தநாளை அறிவித்திருக்கிறேன். இன்னும் என் மகளுக்கு பெயர் வைக்கவில்லை என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் தனது மகளுக்கு பெயர் சூட்டு விழாவை தீபா நடத்தி இருந்தார். மேலும், தனது மகளுக்கு கார்த்திகா என்று பெயர் வைத்து இருக்கிறார். தீபாவிற்கு மகள் பிறந்த செய்தியை அறிந்த போது ஜெயலலிதாவே மீண்டும் பிறந்து வந்துவிட்டார் என்று பலர் கூறிய நிலையில் அவர் பெயரையாவது வைத்திருக்கலாம்.

Advertisement