கடந்த சில வாரமாகவே சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான். சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி காலமானார். மேலும், அவர் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள் .
விஜயகாந்த் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். ஆனால், சில பிரபலங்கள் வர வில்லை. விஜயகாந்தின் உடல் அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது.
விஜயகாந்த் இறப்பு:
அதோடு பிரபலங்கள் பலர் நேரடியாக வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாத காரணத்தால் அவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கார்த்தி, அவருடைய தந்தை சிவக்குமார், சூர்யா, செந்தில்-ராஜலக்ஷ்மி என பல பிரபலங்கள் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி கண்ணீர் மல்க பேசி இருந்தார்கள். ஆனால், நடிகர் வடிவேலு மட்டும் இன்னும் வரவில்லை. அவர் இன்னமும் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.
வடிவேலு குறித்த சர்ச்சை;
அதோடு பிரபலங்கள் கூட கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதிலும் ரசிகர்கள் பலர், வடிவேலு நன்றி கெட்டவர், மோசமான மனிதர் என்றெல்லாம் விமர்சித்து திட்டியும் வருகிறார்கள். சொல்லப்போனால், சோசியல் மீடியாவில் நடிகர் வடிவேலு குறித்து தான் விவாத பொருளாகவே மாற்றி விட்டார்கள். இந்த நிலையில் வடிவேலுக்கு நெருங்கிய நண்பர்களில் ஒருவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகரான மாலின் இது தொடர்பாக பேட்டியில் கூறியிருப்பது, கேப்டன் விஜயகாந்த் இறந்த செய்தி கேட்டவுடனே நடிகர் வடிவேலு ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்தார்.
வடிவேலு நண்பர் பேட்டி:
அவர் நெருங்கிய நண்பர்களிடம் விஜயகாந்த் நல்ல மனிதர், பண்பாளர் என்றெல்லாம் பேசி தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து இருந்தார். கேப்டன் இறப்பதற்கு முன் வடிவேலு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தார். இதனால் தான் உடனடியாக அவரால் வெளியே வர கூடிய சூழல் இல்லை. வடிவேலு வராததை பற்றி தான் இவ்வளவு பேசுகிறார்கள். ஆனால், அவரால் எம்எல்ஏவாகி அஞ்சலி செலுத்த வராதவர்கள் பற்றி பேசாதது ஏன்? மாமனிதன் திரைப்படத்தின் வெற்றி மூலம் மீண்டும் வெற்றியாளராக வடிவேலு வலம் வருகிறார்.
வடிவேலு வராத காரணம்:
தூத்துக்குடி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு எடுத்த மண்ணின் மைந்தன் டைரக்டர் மாரி செல்வராஜ்க்கு ஆதரவாக பேசியது பிடிக்காத சிலர் செய்யும் அரசியல் சூழ்ச்சி தான் இது. விரைவில் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்து வடிவேலு அஞ்சலி செலுத்துவார். அதுமட்டுமில்லாமல் அவருடைய குடும்பத்தாரையும் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பார். அதேபோல் விஜயகாந்தின் இறுதி அஞ்சலிக்கு வடிவேல் வந்திருந்தால் என்னவாக இருக்கும் என்பதை அனைவருமே நினைத்து பார்க்க வேண்டும். நடிகர் விஜய் வந்தபோது அவருடைய கார் பக்கத்தில் செருப்புகள் வீசப்பட்டதை யாராலும் மறக்க முடியாது. வடிவேல் உடைய தாயார் இறந்த போது நடிகர் சங்கத்தை சேர்ந்த பிரபலங்கள் யாருமே எட்டிப் பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார்.