ரசிகர்களை கலங்க வைத்த புகைப்படம் – தனது உடல் நலம் குறித்த ஜாக்கி சொன்ன உண்மை

0
389
- Advertisement -

நடிகர் ஜாக்கி சானின் உடைய லேட்டஸ்ட் புகைப்படம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹாலிவுட் நடிகர் என்றலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது ஜாக்கி சான் தான். பிரூஸ்லீக்கு பிறகு அவரின் வெற்றிடத்தை நிரப்பியது இவர் தான். படஙக்ளில் அதிரடியான சண்டை கட்சிகளுடன் அதில் சில காமெடிகளையும் புகுத்தி பல ஆண்டுகள் ஹாலிவுட்டில் கலக்கியவர்.

-விளம்பரம்-

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் நடிகராக ஜாக்கிஜான் இருக்கிறார். உலக மக்கள் அனைவராலும் விரும்பப்பட்ட நடிகர். இவரை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் கொண்டாடுகிறார்கள், புரூஸ் லீக்கு பிறகு உலகம் முழுவதும் புகழ் பெற்ற சீன நடிகர் என்றால் அது ஜாக்கி ஜான் தான். சீனாவில் தொடங்கி இவர் ஹாலிவுட் வரை கொடிகட்டி பறந்து இருக்கிறார்.

- Advertisement -

ஜாக்கி ஜான் குறித்த தகவல்:

இவருடைய சிரிப்பு, சிக்ஸ் பேக், புத்திசாலித்தனம், சாமர்த்தியமான சண்டை என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் கவர்ந்து இருக்கிறது. சண்டை காட்சிகளில் இவருடைய நடிப்பு அற்புதமாக இருக்கும். இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாக தான் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். பின் படங்களில் துணை வேடங்களில் நடித்தார். அதற்கு பின் தான் இவர் ஹீரோ ஆனார்.

-விளம்பரம்-

தமிழில் ஜாக்கி ஜான் படங்கள்:

மேலும், இவரை அதிகம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது விஜய் டிவி தான். விடுமுறை நாட்கள் என்றாலே விஜய் டிவியில் ஜாக்கிஜான் உடைய டப்பிங் படங்கள் தான் ஓடும். அதுமட்டுமில்லாமல் சுட்டி டிவியில் ஜாக்கிஜான் உடைய சாகசங்கள் வருகிறது. இதனாலே குழந்தைகள் மத்தியில் ஜாக்கிஜான் உடைய படங்கள் அதிகளவு வரவேற்பு பெற்றிருக்கிறது .

ஜாக்கி ஜான் லேட்டஸ்ட் புகைப்படம்:

இவர் பல தற்காப்பு கலைகளை கற்று இருக்கிறார். தற்போது இவருக்கு 70 வயதாகிறது. இருந்தும் இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவருடைய புகைப்படம் ஒன்று
இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. இதை பார்த்த பலருமே ஷாக் ஆகி விட்டார்கள். காரணம், அதில் வயது முதிர்ந்த தோற்றத்தில் ஜாக்கிஜான் இருந்தார். ஜாக்கி ஜானுக்கு என்னானது? உடல்நிலை சரியில்லையா? என்றலாமே ரசிகர்கள் கேட்டிருந்தார்கள்.

ஜாக்கி ஜான் கொடுத்த விளக்கம்:

இந்த நிலையில் இது குறித்து ஜாக்கிஜான் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவர், சமீபத்தில் என்னுடைய புகைப்படத்தை பார்த்த பலருமே என்னுடைய உடல் நலம் குறித்து வருத்தப்பட்டு விசாரித்தார்கள். ஆனால், யாரும் கவலைப்பட வேண்டாம். அது என்னுடைய அடுத்த படத்திற்கான தோற்றம்தான். அந்த நரைமுடி, தாடி, முதியவர் தோற்றம் எல்லாமே என்னுடைய கதாபாத்திரம். அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கூறியிருந்தார்.

Advertisement