எனக்கு 7 நாட்கள் சாப்பாடு போடாமல் நடிக்க வைத்தனர் – விஜய்,ரஜினி பட வில்லனுக்கு நேர்ந்த கொடுமை.

0
564
jagapathy
- Advertisement -

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களாக வலம் வரும் ஜெகபதி பாபு சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்த்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1974ஆம் ஆண்டு வெளியான மஞ்சி மனசு என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினர் நடிகர் ஜெகபதி பாபு. இவரின் தந்தை தெலுங்கு சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளரான மஹேந்திர பிரசாத் ஆவர்.

-விளம்பரம்-

பின்னர் 1989ஆம் ஆண்டு இவர் நடித்த சிம்ஹா ஸ்வப்னம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்து தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அதற்கு பிறகு தொடர்ந்து தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழில்களில் 170க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். இவர் தமிழ் சினிமாவில் மதராஸி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பாய்ந்தனர் லிங்கா, விசுவாசம், அண்ணாத்த, பைரவா என பல படங்களில் நடித்து விட்டார்.

- Advertisement -

ஜெகபதி பேட்டி :

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஜெகபதி பாபு தனக்கு சினிமாவில் நடந்த கசாப்பான நினைவுகள் பற்றி பேசியிருந்தார். அவர் கூறுகையில் “நான் சினிமாத்துறைக்கு வந்து 35 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு சினிமா, நடிப்பே இவற்றை தவிர வேறு ஒன்றும் தெரியாது. என்னுடைய இந்த திரை வாழ்க்கையில் பலவிதமான கசப்பான நிகழ்வுகள் நடந்திருக்கின்றனர். அவற்றில் சிலவற்றை சொல்கிறேன் என்று கூறினார்.

7 நாட்கள் சாப்பிடாமல் இருந்தேன் :

நான் 1992ஆம் ஆண்டு வெளியான சாகசம் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தில் இரண்டவது நாயகனாக நடித்தேன். ஆனால் எனக்கு 7 நாட்கள் சாப்பிட சாப்பாடு கொடுக்காமல் இருந்தார்கள். அங்கே இருந்த யாரும் நான் சாப்பிட்டேனா என்று கூட கேட்கவில்லை. என்னுடைய நிலைமையை பார்த்த அங்கிருந்த லைட் மென் கண்ணீர் விட்டு அழுதார். அப்படி அந்த நேரத்தில் நான் அவமானப்பட்டது என்னுடைய வாழ்க்கையில் ஒரு பாடத்தை கேற்றுக்கொடுத்து.

-விளம்பரம்-

கேவலமாக பார்த்தார்கள் :

நான் தெலுங்கு சினிமாவில் 15 படங்கள் தொடர்ந்து நடித்தால், இவனுக்கு என்ன நடிக்க கொடுத்தாலும் செய்வான் என்று நினைத்துவிட்டார்கள். அதனால் தான் என்னை அந்த சமயம் கேவலமாக பார்த்தார்கள். எனக்கு அப்போதுதான் புரிந்தது. ஒரே மொழியில் நடிக்க கூடாது பல மொழிகளில் நடிக்க வேண்டும் அப்போதுதான் சினிமாவில் மரியாதை கிடைக்கும் என்று.

திருமணத்தில் நம்பிக்கை இல்லை :

அதே போல எனக்கு திருமண சம்பிரதாயங்களில் நம்பிக்கை கிடையாது. அதற்க்காக என்னுடைய இளைய மகளிடம் கூட திருமணம் செய்ய வேண்டாம் என்று கூறினேன். திருமணம் செய்த பிறகு அவர்களின் குழந்தைகள் அவர்களின் பொறுப்பு என இருந்து அவர்களின் பின்னால் செல்வது சரியாக தெரியவில்லை அதனால் தான் என்னுடைய மகளிடம் அப்படி கூறினேன் என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார் நடிகர் ஜெகபதி பிரபு. இவரின் இந்த பேட்டி சோசியல் மீடியாவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement