“உங்கள பாக்கணும்ன்னுதா வந்த” தன் பிறந்தநாளில் ‘ஜெய்பீம்’ சிறுமி வெளியிட்ட வீடியோ – கண்ணு எல்லாம் கலங்கிருச்சு

0
360
joshika
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டு மழையை குவித்தது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது தான் ஜெய் பீம் படம்.

-விளம்பரம்-

மேலும், படத்தில் சந்துரு கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக சூர்யா நடித்து இருந்தார். பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே பழங்குடியின மக்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லி இருக்கிறது ஜெய்பீம். இந்தப்படம் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அது மட்டும் இல்லாமல் இந்தப் படத்தை குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக ஸ்டாலின் என பலரும் பாராட்டி இருந்தார்கள்.

- Advertisement -

ஜெய் பீம் படம் பெற்ற விருதுகள்:

அதே சமயம் இந்த படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக வன்னிய சமூகத்தினர் பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தார்கள். இருந்தாலும், திரைப்படங்களுக்கான ரேட்டிங் குறித்து கணக்கிடும் ஐஎம்டிபி தளத்தில் அதிக ரேட்டிங் பெற்ற ‘ஷஷாங் ரிடெம்ப்ஷன்’ திரைப்படத்தை முந்தி ‘ஜெய்பீம்’ சாதனை படைத்தது. மேலும், ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையாக கருதப்படும் கோல்டன் க்ளோப் விருதுக்கான போட்டியிலும் ஜெய் பீம் படம் இடம் பெற்றிருந்தது. பின் 94வது ஆஸ்கர் விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் ஜெய்பீம் படம் தேர்வாகி இருந்தது. அதோடு ஆஸ்கரின் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் ஜெய்பீம் திரைப்படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

ஜெய் பீம் படத்தில் நடித்த சிறுமி:

மேலும், ஆஸ்கரின் யூட்யூப் தளத்தில் பதிவேற்றம் செய்த முதல் தமிழ் திரைப்படம் ஜெய்பீம் என்பது குறிபிடத்தக்கது. இது ஒரு பக்கம் இருக்க, இந்த படத்தில் இந்த படத்தில் ராஜகண்ணு– செங்கேணி மகளாக அல்லி என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக சிறுமி நடித்திருந்தார். அவரின் நிஜ பெயர் ஜோஷிகா மாயா. ஜெய் பீம் படத்தில் சூர்யா கால் மேல் கால் போட்டு செய்தித்தாள் படிப்பார். அதை பார்த்து சிறுமி அதே செய்வார். அந்த காட்சியின் மூலம் அந்த சிறுமி பிரபலமானார் என்றே சொல்லலாம். மேலும், இந்த படத்தில் சிறுமி நடித்ததற்காக பள்ளி நிர்வாகம் சிறுமிக்கு டிசி கொடுத்து விட்டதாக சொல்லி சோஷியல் மீடியாவில் பல்வேறு செய்திகள் எழுந்து இருந்தது.

-விளம்பரம்-

சிறுமி ஜோஷிகா மாயா செய்த செயல்:

இந்த தகவல் எல்லாமே பொய், உண்மை கிடையாது என்று சிறுமியின் பெற்றோர்கள் விளக்கம் கொடுத்து இருந்தார்கள். இந்த நிலையில் சிறுமி ஜோஷிகா மாயா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் பலரையும் கலங்க வைத்திருக்கிறது. அது என்னவென்றால், ஜோஷிகா தன்னுடைய பிறந்தநாள் தினத்தன்று சாலையோரம் ஆதரவின்றி வாழும் ஒரு பெண்ணுக்கு சாக்லேட் கொடுத்திருக்கிறார். அப்போது அருகே இருக்கும் நபர், இன்னைக்கு அவ பிறந்தநாள். உங்கள ரொம்ப நாளா அவ பாக்க வரலை . அதான், உங்கள பாக்கணும்னு வந்தா. முதல் சாக்லேட்டே உங்களுக்கு தான் குடுக்குறா” என கூறினார்.

வைரலாகும் சிறுமி ஜோஷிகா மாயா வீடியோ:

உடனடியாக அந்தப் பெண்ணும் மகிழ்ச்சியில் இருக்கிறார். பின் ஜோஷிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் கூறி, நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். பிறகு ஜோஷிகா அங்கிருந்து கிளம்பும் போது ஆதரவற்ற அந்த பெண் ‘சட்டை இல்லை வேறு சட்டை வேண்டும்’ என்று பரிதாபமாக கேட்டாள். உடனடியாக ஜோஷிகா, அடுத்த வாரத்தில் சட்டை வாங்கி தருவதாக உறுதி அளிக்கின்றனர். இப்படி ஜோஷிகா தன்னுடைய பிறந்த நாளன்று ஆதரவில்லாமல் சாலையோரம் வசிக்கும் பெண்ணுக்கு முதலாவதாக சாக்லேட் கொடுத்து அவளுக்கு ஆடைகள் வாங்கி தருவதாக கூறி இருக்கும் வீடியோ பார்ப்போரை கலங்க வைத்திருக்கிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் ஜோஷிகாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Advertisement